தமிழ் மணம் நட்சத்திரப் பதிவர் என்று ஒருவரை தேர்ந்தெடுத்து ஒரு வாரம் அவரது பதிவுகளை தமிழ்மண முகப்பில் வைத்து பெருமைப் ?! படுத்துகிறது
அந்தப் பதிவரின் நட்சத்திர முதல் பதிவில் வாழ்த்துக்கள், நட்சத்திர வாழ்த்துக்கள் போன்ற பின்னூட்டங்கள் வந்து அது ஒரு அங்கிகாரக்தான் போலும் என்ற நினைப்பை வரவழைக்கிறது.அந்த அங்கீகாரம் ஓரளவு உண்மையும் கூட
நானும் பல நாட்களாக நல்ல தேர்ந்த சீனியர் பதிவர்கள் , பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதுபவர்களை தேர்ந்தெடுத்து போடுவார்கள் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இந்த வாரம் தமிழ்மண நட்சத்திரத்தின் வலைப் பூவில் முகப்பில் காணக் கிடைக்கும் செய்தி
"இப்பதிவுகள் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தரும் முயற்சி."
அதாவது குற்றச் சாட்டுக்கள் உண்மையாய் இருந்தாலும் கூட சார்பு நிலையுடைய இவர் அதற்கும் விளக்கம் தர ( ஒத்துக் கொள்ள மாட்டார்...சப்பைக் கட்டு கட்டுவார் போல) முயலும் ஒரு வலைத்தளம்தான் என அக் மார்க் முத்திரை குத்திக் கொண்டதுதான் இந்த வார நட்சத்திரத்தின் வலைப்பூ.
சார்பு நிலையுள்ளவர்கள் நட்சத்திரப் பதிவராகக் கூடாதா என்றால் தாராளமாக ஆகலாம்..
முன்னாலும் லக்கி லுக் போன்ற திமுக கட்சி சார்புடைய பதிவர்கள் நட்சத்திரங்களாக்கப் பட்டிருக்கிறார்கள்...பார்ப்பனீயத்தை ஆதரிப்பதாக கட்டம் கட்டப்பட்ட டோண்டு ராகவனும் , அசுரன் போன்ற இடது சாரி சிந்தனையுள்ளவர்களும் நட்சத்திரப் பதிவர்களாகியிருக்கிறார்கள்..அது அவர்களது சார்பு நிலை ..ஆனால் அந்த வலைப் பக்கங்களில் கொஞ்சமேனும் வெரைட்டியும் படிப்பவர்களுக்கு ஆர்வமேற்படுத்தும் விஷயங்களும் இருக்கும்..(அட்லீஸ்ட் அந்த நட்சத்திர வாரத்திலேயாவது) ஆனால் இந்த வார நசத்திரப் பதிவரின் பதிவுகள் அப்படியா? ஒரு வட்டத்தை விட்டு அவரது பதிவுகள் வெளியே சென்றதே இல்லை..பதியும் மூன்று வருடங்களாக !!!!! இப்படிப் பட்ட நட்சத்திரப் பதிவர்களாய் ஏற்படுத்தி என்ன சாதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை? இல்லை ஆள் பற்றாக் குறையா ?
நட்சத்திர பதிவர்களாக்குவது எங்களது இஷ்டம்..யாரை வேண்டுமானாலும் ஆக்கி படிக்கும் அனைவரையும் கொடுமைப்படுத்துவோம் என தமிழ் மணம் சொல்லலாம், சொன்னாலும் அது சரியே.
ஆனால்
நட்சத்திரப் பதிவு என்றால் ஒரு அலர்ஜியும் , அதே சமயத்தில்
"உங்களைப்போன்றவர்களை எல்லாம்... நட்சத்திரம் ஆக்கிய தமிழ்மணம் பேசாமல் சிரைக்க போகலாம்! "
போன்ற அவல பின்னூட்டங்களும் வருகிறதே ???
தெளிந்து தமிழ் மணமாவது அல்லது நட்சத்திரமாவது மாறினால் நல்லது :))
Friday, December 28, 2007
Subscribe to:
Comments (Atom)