Tuesday, July 22, 2008

மரண அடி 2008

மதவாத சக்தி என்று வருணிக்கப் படும் பி ஜே பி ஆட்சிக்கு வந்து இந்தியா நாசமாகப் போனாலும் பரவாயில்லை, எப்படியும் இந்த அரசைக் கவிழ்த்தாவது அணு சக்தி ஒப்பந்தத்தைத் தடுத்து தனது சீன எஜமான விசுவாசத்தை நன்றாகவே வாலாட்டிக் காட்டிய இடது சாரிகளுக்கும்


எப்படியும் ஆட்சி கவிழ்ந்து விடும், மீண்டும் கூட்டணியாகவோ அல்லது அடுத்த தேர்தல் வந்தால் அதிலாவது ஆட்சியைப் பிடித்து அரசுக் கட்டிலில் ஏறி விடலாம் என வாயில் நீர் ஒழுகக் காத்திருந்த பி ஜே பியின் கிழட்டு ஓநாய்களுக்கும்

சந்தில் புகுந்து சிந்து பாடி கிடைத்த ஆதாயத்தில் பெரும் பகுதியை சுருட்டிக் கொள்ளலாம் என்று பேரம் பேசி படியாத நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்து அரசைக் கவிழ்க்க முயன்ற தேவ கவுடா மற்றும் அஜித் சிங் மலைப்பாம்புகளுக்கும்

பேசாமல் கொடுத்த பணத்தையும் பதவிகளையும் வாங்கிக் கொண்டு அரசுக்கு ஆதரவாய் ஓட்டுப் போட்டு விட்டு ஜாலியாய் 9 மாதம் அனுபவிக்காமல் மாயாவதி என்ற மண் குதிரை நம்பி முலயமைக் கை கழுவிய சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு எம் பிக்களுக்கும்

வாங்கிய பணத்தை கமுக்கமாய் வைக்காமல் ஏதோ புரட்சி பண்ணி அரசினைக் கவிழ்க்கப் போவது போல் பார்லிமெண்டில் அத எடுத்து கையில் வைத்து ஆட்டிக் கொண்டு, இன்று அரசும் கவிழாமல் ,கேசிலும் மாட்டிக் கொண்ட பா ஜா கா எம் பிக்களுக்கும்


அவசர கோலத்தி மூன்றாவது அணி தொடங்கி கொஞ்ச நாளேனும் பிரதமர் பதவியை அனுபவித்து விடலாம் என கனவு கண்ட மாயாவதிக்கும்

மற்றும்

இதையெல்லாம் தனக்கு சம்பந்தமே இல்லாத விஷயம் போல் பார்த்துக் கொண்டு , இன்னும் இந்திய அரசியல்வாதிகளிடம் நம்பிக்கை வைத்து, தனக்கு ஏதாவது நல்லது நடந்து விடாதா என எதிர்பார்த்து ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போட்டு காத்திருக்கும் இளிச்சவாய் இந்திய குடிமக்களுக்கும் " மரண அடி "

22/07/08 அன்று ஜனநாயக முறையில் நடந்த ?! நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோஹன் சிங் அரசு 275 க்கு 256 என்ற கணக்கில் வென்றது.