Saturday, November 01, 2008

(மனசாட்சியுள்ள)தொண்டனின் மனநிலை

"உன் பேனா தலை குனிந்தால்,
தமிழகம் தலை நிமிர்கிறது "

ஒரு சமயம் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழக முதல்வர் கருணாநிதியைப் பார்த்து இப்படிக் கவிதை வடித்தார்.

இப்படியெல்லாம் வருணிக்கப் பட்ட தி மு க தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான கருணாநிதியின் இன்றைய காலகட்டத்தின் செயல்பாடுகள் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே அதிருப்தியையும், கழிவிரக்கத்தையும் தோற்றுவித்துவிட்டது என்றால் அது மிகையில்லை.

குறிப்பாக கருணாநிதியின் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த சமீபத்திய அறிக்கை,நிலைபாடுகள் மற்றும் செயல்பாடுகள் அவரது தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட இந்தப் பதிவரது இந்தப்பதிவின் மூலமாக இப்படி வெளிப்பட்டுள்ளதெனில் மற்றவர் பற்றி சொல்லவும் வேண்டுமோ ?

முதல்வராவது திருந்தவேண்டும் அல்லது அவரது கண் மூடித்தனமான ஆதரவாளர்களாவது வெகு சீக்கிரத்தில் உண்மை நிலை உணர வேண்டும்!!!! என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?

Sunday, August 03, 2008

இவரை நல்லா பாத்துக்குங்க


சென்னை, ஆக. 3-
புழல் ஜெயிலில் கைதிகளுக்கு வசதிகள் செய்து தருவதற்காக லஞ்சம் வாங்கிய ஜெயில் வார்டன் கைது செய்யப்பட்டார்.
சென்னை புழல் ஜெயிலில் 2-வது நிலை வார்டனாக பணிபுரிந்து வந்தவர் சாலமோன் (வயது 30). ஜெயிலில் இருக்கும் கைதிகளுக்கு செல்போன் மற்றும் போதைப் பொருட்கள் கொடுத்து லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன. கைதிகளுக்கு பொருட்களை கொடுப்பதற்காக கைதிகளின் உறவினர்களிடம் ஆயிரக் கணக்கில் சாலமோன் பணம் வாங்குவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது.
இந்த நிலையில் சென்னை வடபழனியை சேர்ந்த சங்கர் என்பவர் சாலமோனை சந்தித்தார். தனது நண்பன் அந்தோணி, போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளதாகவும், அவருக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் சாலமோனிடம் சங்கர் கேட்டுள்ளார். அந்தோணிக்கு படுக்கை, மின்விசிறி, மது வசதிகளை செய்து கொடுப்பதற்கு பணம் தருவதாகவும் கூறி இருக்கிறார்.
ரூ.8 ஆயிரம் பணம் கொடுத்தால் வெளியில் உள்ள அதே சொகுசு வாழ்க்கையை உள்ளேயும் செய்து தரலாம் என்று சாலமோன் சம்மதித்தார். இந்தப் பணத்தை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே குறிப்பிட்ட இடத்தில் வைத்துத் தர வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதைத் தெரிந்து கொண்ட போலீசார், சாலமோனை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். சாலமோனைப் பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நடராஜன், திருநாவுக்கரசு மற்றும் இன்ஸ்பெக்டர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை சங்கரிடம் கொடுத்து, அதை சாலமோனிடம் கொடுக்கக் கூறினர்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ரசாயனம் தடவிய பணத்துடன் சங்கர் கோயம்பேடு சென்றார். அங்கு ஏற்கனவே தனிப்படை போலீசார் சாதாரண உடையில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் சாலமோன் அங்கு வராமல், விருகம்பாக்கம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்-க்கு சங்கரை வரக் கூறினார். இந்தத் தகவலை போலீசிடம் கூறி விட்டு, அங்கு சங்கர் சென்றார்.
பிறகு தன்னிடம் உள்ள ரூ.8 ஆயிரம் பணத்தை எடுத்து சாலமோனிடம் கொடுத்தார். அதை சாலமோன் வாங்கி பைக்குள் வைக்கும் போது, போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர். தப்பி ஓட முயற்சித்த அவரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் சிலர், செல்போன் மூலம் வேறு சிறையில் உள்ள மற்ற தீவிரவாதிகளுடன் செல்போனில் பேசிய தகவல் சமீபத்தில் வெளியானது.
இதற்கும் சாலமோன் உடந்தையாக இருப்பாரோ? என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்தது. பின்னர் சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

படம் : நன்றி-தினமலர்
செய்தி: நன்றி-தினத்தந்தி

தேடப்படும் குற்றவாளிகள் அப்படீனெல்லாம் போலிஸ் ஸ்டேஷன்ல போட்டோவெல்லாம் மாட்டுறாங்கல்ல.அது மாதிரி தப்பு செஞ்ச போலிஸ்காரங்க போட்டோவெல்லாம் மாட்டுறதுக்கு எதுனா இடம் இருக்கா?


எதுக்குன்னா..ஆத்திர அவசரத்துக்கு , எந்த வேலைக்கு யாருகிட்ட போனா நடக்கும் ? ரேட்டு என்ன ரேன்ச்ல இருக்கும் அப்படீன்னு மக்களுக்கு ஒரு ரெஃபரென்ஸுக்கு உபயோகமா இருக்குமுல்ல?

Tuesday, July 22, 2008

மரண அடி 2008

மதவாத சக்தி என்று வருணிக்கப் படும் பி ஜே பி ஆட்சிக்கு வந்து இந்தியா நாசமாகப் போனாலும் பரவாயில்லை, எப்படியும் இந்த அரசைக் கவிழ்த்தாவது அணு சக்தி ஒப்பந்தத்தைத் தடுத்து தனது சீன எஜமான விசுவாசத்தை நன்றாகவே வாலாட்டிக் காட்டிய இடது சாரிகளுக்கும்


எப்படியும் ஆட்சி கவிழ்ந்து விடும், மீண்டும் கூட்டணியாகவோ அல்லது அடுத்த தேர்தல் வந்தால் அதிலாவது ஆட்சியைப் பிடித்து அரசுக் கட்டிலில் ஏறி விடலாம் என வாயில் நீர் ஒழுகக் காத்திருந்த பி ஜே பியின் கிழட்டு ஓநாய்களுக்கும்

சந்தில் புகுந்து சிந்து பாடி கிடைத்த ஆதாயத்தில் பெரும் பகுதியை சுருட்டிக் கொள்ளலாம் என்று பேரம் பேசி படியாத நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்து அரசைக் கவிழ்க்க முயன்ற தேவ கவுடா மற்றும் அஜித் சிங் மலைப்பாம்புகளுக்கும்

பேசாமல் கொடுத்த பணத்தையும் பதவிகளையும் வாங்கிக் கொண்டு அரசுக்கு ஆதரவாய் ஓட்டுப் போட்டு விட்டு ஜாலியாய் 9 மாதம் அனுபவிக்காமல் மாயாவதி என்ற மண் குதிரை நம்பி முலயமைக் கை கழுவிய சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு எம் பிக்களுக்கும்

வாங்கிய பணத்தை கமுக்கமாய் வைக்காமல் ஏதோ புரட்சி பண்ணி அரசினைக் கவிழ்க்கப் போவது போல் பார்லிமெண்டில் அத எடுத்து கையில் வைத்து ஆட்டிக் கொண்டு, இன்று அரசும் கவிழாமல் ,கேசிலும் மாட்டிக் கொண்ட பா ஜா கா எம் பிக்களுக்கும்


அவசர கோலத்தி மூன்றாவது அணி தொடங்கி கொஞ்ச நாளேனும் பிரதமர் பதவியை அனுபவித்து விடலாம் என கனவு கண்ட மாயாவதிக்கும்

மற்றும்

இதையெல்லாம் தனக்கு சம்பந்தமே இல்லாத விஷயம் போல் பார்த்துக் கொண்டு , இன்னும் இந்திய அரசியல்வாதிகளிடம் நம்பிக்கை வைத்து, தனக்கு ஏதாவது நல்லது நடந்து விடாதா என எதிர்பார்த்து ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போட்டு காத்திருக்கும் இளிச்சவாய் இந்திய குடிமக்களுக்கும் " மரண அடி "

22/07/08 அன்று ஜனநாயக முறையில் நடந்த ?! நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோஹன் சிங் அரசு 275 க்கு 256 என்ற கணக்கில் வென்றது.

Monday, April 14, 2008

லக்கி லுக்கிற்கு அடித்த அதிர்ஷ்டம்



தமிழ் மணம் மூலமாக பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு பதிவில் கண்ணில் பட்ட படங்கள் . தனித்தனியாக போட முடியாததால் ஒரே படமாக தந்துள்ளேன்.

அனைவருக்கும் ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்.

Sunday, April 13, 2008

சித்திரைத் திருநாள் / சர்வதாரி புத்தாண்டு வாழ்த்துக்கள்

இன்று சர்வதாரி ஆண்டின் முதல் நாள் மற்றும் சித்திரைத் திரு நாள்


சித்திரைத் திருநாளைப் பற்றி மதிமுக தலைவர் வைகோ பின் வரும் கருத்தை கூறியுள்ளார்.

""மழையும், குளிரும், பனியும் மறைந்து மஞ்சள் வெயில் கண்டு உயிரினங்கள் கொஞ்சிக் குதூகலிக்க வையகம் சிலிர்க்கும் இளவேனிலின் வருகைக்குக் கட்டியம் கூறி இத்தரை மகிழ்ந்திட சித்திரை மலர்ந்துள்ளது.

தமிழர் வாழ்வோடும், வரலாறோடும் பின்னிப் பிணைந்த சித்திரையின் மாட்சிக்கு எத்தனையோ சாட்சியங்களை இலக்கியங்கள் கொண்டுள்ளன.

இந்திர விழா, வசந்த விழா என்றெல்லாம் கொண்டாடி களித்தது இச் சித்திரைத் திருநாளில்தான். திங்களையும், செங்கதிரையும் மாமழையையும் போற்றி இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்ந்த தமிழரின் சிறப்புக்குச் சித்திரைத் திருநாள் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

மதிமுக சார்பில் தமிழ்ப் பெருமக்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.""


வைகோவின் இந்தக் கருத்துடன் ஒத்துப் போவதுடன், எந்த நாளையும் மக்கள் மகிழ்சித் திருநாளாகக் கொண்டாடுவதிலோ , தெய்வ நம்பிக்கை இருப்பின் சிறப்பு வழிபாடு செய்வதிலோ தடையேதும் இல்லை என்ற கருத்தை வலியுருத்தும் விதமாய் இந்தநாளை, சித்திரை திருநாளாகவோ சர்வதாரி ஆண்டுப் பிறப்பாகவோ கொண்டாடும் அனைவருக்கும் " வாழ்த்து" தெரிவிக்கிறேன்.

மக்கள் மகிழும் எந்த நாளும் புது நாளே எந்த நாளும் திரு நாளே என்பதை அனைவரும் உணரவேண்டும்.மகிழ்ச்சித் திருநாளை, வழிபாடுகளை மற்றும் அடுத்தவர் நம்பிக்கைகளை " தனது கொள்கை / தனது தலைவனுக்கு வால் பிடித்தல் " போன்ற காரணங்களுக்காக முட்டாள்தனம் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சொல்ல தலைப்பட்ட " சில மூடர்களுக்கும்" புத்தி தெளிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, April 12, 2008

ஆற்காட்டாரின் காலை டிபன் லிஸ்ட்

அடிக்கடி தமிழக அமைச்சர்கள் ஏதாவது தத்துவ முத்து உதிர்த்து காமெடி பண்ணுவாங்க. இதுல தலை சிறந்தவர் "ஆற்காடு வீராசாமி" இவரு ஏற்கனவே உதுத்திருந்த சிந்தனை முத்துக்களை " http://velanvelan.blogspot.com/2007/10/blog-post_02.html " என்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவரது அறிவுத் திறன் பற்றிய நமது கணிப்புக்கு சற்றும் ஏமாற்றம் தராத வகையில் நேற்றும் அவர் உதிர்த்த தத்து(பித்து)வ முத்துக்கள் கீழே.


" ஒரு குடும்பத்தில் காலையில் எழுந்து ஒரு பெண் அடுப்பாங்கரைக்குச் சென்றால், தனக்கு டீ, கணவருக்கு காபி, மாமியாருக்கு ஹார்லிக்ஸ், மாமனாருக்கு பூஸ்ட் போடவேண்டும். டிபன் என்றால், இட்லி, தோசை, பூரி, பொங்கல் என்று ஆளாளுக்கு விதவிதமாக செய்ய வேண்டி உள்ளது. இதைத் தவிர்க்க, காலையில் காபி அல்லது டீ போன்ற ஒரே பானம், டிபன் என்றால் இட்லி அல்லது தோசை போன்று அனைவருக்கும் ஒரே வகையான உணவு மட்டும் தான் என்று, பெண்கள் கண்டிஷனாக சொல்ல வேண்டும். அப்போது தான், காலையில் இருந்து இரவு வரை அடுப்பாங்கரையில் கிடப்பதைத் தவிர்க்க முடியும். இதன்மூலம் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் சேர்ந்து வருமானத்தை ஈட்ட வேண்டும்."


ஒவ்வொரு வேளையும் ஹார்லிக்ஸ் , பூஸ்ட்,காபி, டீ என விதவிதமாக குடிக்கும் மற்றும் ஒவ்வொரு வேளையிலும் இட்லி,தோசை, பூரி , பொங்கல் என்று நாலு விதமான டிபன் செய்து சாப்பிடும், குடும்பத்தில் உள்ளவர்கள்தான் "பெண்கள் சுய உதவிக் குழு"க்களில் சேர்ந்து வருமானம் ஈட்டக் கூடிய நிலையில் இருக்கிறார்களா? அடடா அமைச்சரின் அறிவுத் திறத்தை எத்தனை பாராட்டினாலும் தகும். ஒரு வேளை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர் வீட்டு சமையலரையில் நுழைந்து பார்த்து விட்டு அதுதான் ஒட்டு மொத்த தமிழகத்தின் நிலைமை என்று நினைத்து விட்டாரோ ?


இவர் சொன்னதைப் பார்த்தால் ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது . பென்ஸ் காரில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பணக்கார சிறுவன் சிலர் தெருவில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து கார் டிரைவரிடம் கேட்டானாம் " இவர்களெல்லாம் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் " என்று. டிரைவர் "சாப்பிட சாப்பாடு கிடைக்கவில்லை, அதனால் பிச்சை எடுக்கிறார்கள்" என்றாராம். அதற்கு சிறுவன் " சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் என்ன ? ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போய் டிபன் சாப்பிட வேண்டியதுதானே" என்றானாம் .அதுமாதிரி இருக்கு ஆற்காடு வீராசாமி சொல்வது :))

Thursday, February 28, 2008

சுஜாதாவின் மரணம் மற்றும் TBCD போன்றவர்களின் பதிவுகள்

""சுஜாதாவின் சில அரசியல் நிலைப்பாடுகள், அதிரடி புறந்தள்ளல்கள், பிரபலங்கள்/ஆளுமைகளுக்கு அவர் காட்டும் அதீத சாய்வு, திரைப்படங்களில் வந்த சில கருத்தமைவுகள் போன்றவை குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், சுஜாதாவின் நீண்ட நெடுங்காலத் தமிழ்ப் பங்களிப்பு அவற்றையெல்லாம் விட பிரமாண்டமானது, முக்கியமானது. என்றும் நிலைத்திருப்பது. வாழ்க அவர் புகழ் """

காசி ஆறுமுகத்தின் இந்த வரிகள் சுஜாதா என்கின்ற தமிழ் எழுத்தாளர் அவரது கருத்து ,பார்வை இவற்றோடு ஒத்துப் போகாதவரும் தமிழுக்கு அவரின் பங்களிப்பை மறுக்கமாட்டார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு.

இன்னும் இது போல சுஜாதாவை பார்பனர் என்றும் பார்ப்பனீயத்தை கடை பிடித்தவர் என்றும் எதிர்க்கும் பலரும் கூட அவரது தமிழ் இலக்கிய உலகிற்காற்றிய சேவையை மறுதலிக்கவில்லை.மாறாக அவர் மறைந்த இத்தருணத்தில் நினைவு கூர்ந்துள்ளதை பல பதிவுகளின் வாயிலாக காண முடியும்.

ஆனால் இந்தத் தருணத்தை பயன் படுத்தி " சீப் பப்ளிசிடிக்காக மட்டுமே " அவரை தமிழ் துரோகி என்றெல்லாம் பதிவு போட்டுள்ள TBCD என்ற பதிவரின் புளகாங்கிதம் அடைய வைக்கும் தமிழ் பற்று பிரமிக்க வைக்கிறது.

தமிழ் வலைப் பதிவில் மறை கழண்டு சுற்றித் திரியும் சில போலி கம்யூனிச வியாதிகளைத் தவிர வேறு யாரும் அவர் கருத்தை ஆதரிக்கவில்லை என்பதிலிருந்தே இது எவ்வளவு கேவலமான ஒரு எண்ணம் என்று தெரிந்து கொள்ளலாம் .

இருந்தாலும் TBCD "இது என்ன இழவு வீடா" என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் . ஆமாம் ..இது இழவு வீடுதான்..சுஜாதா என்கின்ற தமிழ் இலக்கியகர்த்தாவை இழந்து தவிக்கும் இழவு வீடுதான்.

அந்த இழவு வீட்டில் பிணத்தின் நெற்றிக்காசை திருட்டுத் தனமாக திருட வந்த கயமை உங்கள் பதிவு.

தூ ..இதெல்லாம் ஒரு பொழைப்பா?

Wednesday, January 30, 2008

வலையுலக சிக்மன் "ஃப்ராடுகள்"

ஒரு வழியாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜான் சிங் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ஸுக்கும் இடையேயான நிற வெறி குற்றச்சாட்டு (racial abuse) ஒரு மாதிரியாக முடிவுக்கு வந்து விட்டது, எந்தத் தரப்புக்கும் அதிகம் சேதாரமில்லாமல் :)
இதில் எனக்கு புரியாத ஒரு விஷயம் ஹர்பஜன் , சைமண்சை " குரங்கு" என்று திட்டினாராம்..அதனால் அது ஒரு நிற வெறி குற்றச் சாட்டாக பதியப் பட்டிருக்கிறதாம்.
" குரங்கு " என திட்டுவது எப்படி நிறவெறியாகும் என குழம்பிய எனக்கு ஒரு கிரிக்கெட் தெரிந்த நண்பர் தெளிவு படுத்தினார் " அதாவது மாட்சுகள் தொடங்கும் முன்னரே இரண்டு அணி தலைவர்களும், நடுவர்களுடன் கூடிப் பேசி எதெல்லாம் விலக்கப் படவேண்டிய வசவுகள் என்றளவில் முடிவு செய்து கொள்வார்களாம் . அந்த சொல்லை யாரேனும் உபயோகப்படுத்தினால் அது குற்றமென கொள்ளப்படும் " என்றார், அப்போது நான் "அப்படியில்லாமல் விடுபட்டுப் போன வேறு ஏதேனும் சொல்லை , அது உண்மையிலேயே நிறவெறியை குறிக்கக் கூடிய சொல்லாக இருந்தாலும் அல்லது மற்றவரை இழிவு படுத்தக் கூடிய சொல்லாக இருந்து அதை உபயோகித்தால் என்னாகும்?" என்று கேட்டேன். அப்படி பட்ட தவறுகள் அந்த சமயத்தில் தண்டனைக்குள்ளாகாமல் தப்பிக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம் என்று நண்பர் சொன்னார் . என்னைய்யா லாஜிக் இது என்று பட்டது.


சரி. இதை எதற்கு இப்போது சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? வலையுலகிலும் இப்படிப் பட்ட சைக்கோத்தனமான விஷயங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.சமீபத்தில் ஒரு பதிவர் அப்படியே புரட்சி வழித்தோன்றலாக தன்னை எண்ணி புளகங்கிதம் அடைந்து கொண்டிருப்பவர், அவர் இன்ன சாதியை சேர்ந்தவர் என ஏதோ ஒரு அனானி எங்கோ உமிழ்ந்ததற்கு எவனெவன் எப்படி சாதி கண்டு பிடிக்கிறான் என்றெல்லாம் ஆராய்ச்சி ரேஞ்சுக்கு பதிவு போட்டு " ங்கொய்யால எவன் அவன்""இன்ன சாதிகாரனுக்கு இதே பொழைப்பு " என்றெல்லாம் ஜால்ரா முழங்க அடித்துத் தாக்கியவர், ஒரு பதிவர் அவரை பல விதமாக தொந்தரவு செய்து ,கிண்டலடித்து,திட்டி , சண்டை போட்ட போது அவரை இந்தப் பதிவர் பதிலளித்து திட்டியது...வேறெப்படி " அன்னாரின் ஜாதியை சொல்லித்தான் "

இத்தனைக்கும் தன்னுடைய பதிவில் வரும் அப்படிப் பட்ட கமெண்டுகளை டெலிட் செய்யும் வசதி இருந்தும், செய்யாமல் அப்படிப் பின்னூட்டத்தை தானே அனுமதித்து ..அதற்கு பதிலாக ஜாதியை குறிப்பிட்டு திட்டுவது என்ன எழவு கலாசாரமோ தெரியாது.

இவனுகளெல்லாம் தான் ஜாதியில்லாத சமுதாயத்தை உருவாக்க முன்னிற்கின்ற புனித பிம்பன்களாம்..மூத்த , முற்றிய பதிவர்களாம்...சரிதானுங்க :)

இந்தப் பதிவு முழுக்க வலையில் பார்த்த விஷயத்தை எழுதும் கண்ணோட்ட உளவியல் சம்பத்தப் பட்டது.புதிதாக ஒன்றுமில்லை.இதை வலை படிக்கும் எல்லோரும் பார்த்திருப்பார்கள்தான்.அதையே கொஞ்சம் அனைவரும் யோசிக்கும் வண்ணம் எடுத்து இயம்பியிருக்கின்றேன்.

யாரேனும் பதிவர் , இந்தப் பதிவு அவர்களை சொல்வதாக கருதினால், இந்த மாதிரி கீழ்த்தர எண்ணம் கொண்ட "திருட்டு ஆண்டை" மனோ பாவம் கொண்டு வெளி வேஷம் போடுகிற குழுவில் அவரும் ஒரு உறுப்பினராக அவரே உணர்வதற்கு நான் பொறுப்பல்ல. உங்களது தவறை அக்கரையாக சுட்டிக்காட்டிய அந்த நன்றிக் கடனோடு திருந்தப் பாருங்கள்.

Tuesday, January 29, 2008

தமிழச்சி, லக்கி லுக் - சில கேள்விகள்

கேள்வி - 1...தமிழச்சி ஏன் எப்போதும் தமிழ "ச்சீ" என்று சொல்லும் படியாக எழுதுகிறார்.?இதுக்கு முன்னாடி சரோஜாதேவி புஸ்தகத்துக்கு ப்ரூப் ரீடரா இருந்தாங்களா?

வலைப் பதிவில் எப்படி வேணா எழுதுறது அவங்கவங்க பிரியம்.ஆனா அதை பொது தொரட்டி போட்டு திரட்டும் போது ஒரு வரையரை வேணுமா ? இல்லையா? நாலு பேர் வந்து படிக்கிற இடமில்லையா? நீ ஏண்டா என் வலைப் பக்கமெல்லாம் வர்ர? மயிராண்டி.. அப்படீன்னு அக்கா சவுண்டு விடராங்கன்னா , அதுக்கு பதில் " நானா அங்கல்லாம் வரலீங்கோ..தமிழ் மணம் முகப்புல தலைப்பைப் பார்த்து அப்படியே ஆடிப் போயி மவுஸ கிளிக்கிடோமுங்கோ". அப்புறம் அக்கோய், நீங்க சொன்ன கருத்துல நமக்கு எந்த ஆச்சரியமோ அல்லது முரணோ இல்லிங்கக்கோய். ஆனா சொல்றதுலேயும் ஒரு நயம் வேணாங்களா? நம்ம நெனைப்புல வர்ரது என்னன்னா இப்படி எழுதுரது தமிழ்மணத்துக்கு ஏற்புடையதா?


கேள்வி- 2 "லக்கி லுக் பெரியாரையும் கருணாநிதியையும் பாசிஸ்ட் என ஏன் வர்ணிக்கிறார்? :)

அதாகப்பட்டது மேலே குறிப்பிட்ட தமிழச்சி பதிவில் " இருந்தால்தானே சொல்வதற்கு " என்று தமிழச்சி கேட்டதற்கு "உங்களுக்கு தெரியாது என்பதால் இல்லவே இல்லை என்று சொல்வதும் கூட ஒருவகை பாசிஸம் தான் " என்று தத்துவார்தமாக பதிலிட்டிருந்தார். கடவுள் மறுப்பிற்கும் இதையே சொல்லலாமே.பெரியாருக்கும் ,கருணாநிதிக்கும் தெரியாது என்பதால் அவர்கள் இல்லை என்று மறுக்கிறார்கள்.அவர்கள் பாசிஸ்டுகளா? இல்லை இதுக்கு வேற மாதிரி பதில் உண்டுங்களா ?

அப்பால எதுனா சந்தேகம் வந்தா கேக்குறோம்.