Wednesday, January 30, 2008

வலையுலக சிக்மன் "ஃப்ராடுகள்"

ஒரு வழியாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜான் சிங் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ஸுக்கும் இடையேயான நிற வெறி குற்றச்சாட்டு (racial abuse) ஒரு மாதிரியாக முடிவுக்கு வந்து விட்டது, எந்தத் தரப்புக்கும் அதிகம் சேதாரமில்லாமல் :)
இதில் எனக்கு புரியாத ஒரு விஷயம் ஹர்பஜன் , சைமண்சை " குரங்கு" என்று திட்டினாராம்..அதனால் அது ஒரு நிற வெறி குற்றச் சாட்டாக பதியப் பட்டிருக்கிறதாம்.
" குரங்கு " என திட்டுவது எப்படி நிறவெறியாகும் என குழம்பிய எனக்கு ஒரு கிரிக்கெட் தெரிந்த நண்பர் தெளிவு படுத்தினார் " அதாவது மாட்சுகள் தொடங்கும் முன்னரே இரண்டு அணி தலைவர்களும், நடுவர்களுடன் கூடிப் பேசி எதெல்லாம் விலக்கப் படவேண்டிய வசவுகள் என்றளவில் முடிவு செய்து கொள்வார்களாம் . அந்த சொல்லை யாரேனும் உபயோகப்படுத்தினால் அது குற்றமென கொள்ளப்படும் " என்றார், அப்போது நான் "அப்படியில்லாமல் விடுபட்டுப் போன வேறு ஏதேனும் சொல்லை , அது உண்மையிலேயே நிறவெறியை குறிக்கக் கூடிய சொல்லாக இருந்தாலும் அல்லது மற்றவரை இழிவு படுத்தக் கூடிய சொல்லாக இருந்து அதை உபயோகித்தால் என்னாகும்?" என்று கேட்டேன். அப்படி பட்ட தவறுகள் அந்த சமயத்தில் தண்டனைக்குள்ளாகாமல் தப்பிக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம் என்று நண்பர் சொன்னார் . என்னைய்யா லாஜிக் இது என்று பட்டது.


சரி. இதை எதற்கு இப்போது சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? வலையுலகிலும் இப்படிப் பட்ட சைக்கோத்தனமான விஷயங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.சமீபத்தில் ஒரு பதிவர் அப்படியே புரட்சி வழித்தோன்றலாக தன்னை எண்ணி புளகங்கிதம் அடைந்து கொண்டிருப்பவர், அவர் இன்ன சாதியை சேர்ந்தவர் என ஏதோ ஒரு அனானி எங்கோ உமிழ்ந்ததற்கு எவனெவன் எப்படி சாதி கண்டு பிடிக்கிறான் என்றெல்லாம் ஆராய்ச்சி ரேஞ்சுக்கு பதிவு போட்டு " ங்கொய்யால எவன் அவன்""இன்ன சாதிகாரனுக்கு இதே பொழைப்பு " என்றெல்லாம் ஜால்ரா முழங்க அடித்துத் தாக்கியவர், ஒரு பதிவர் அவரை பல விதமாக தொந்தரவு செய்து ,கிண்டலடித்து,திட்டி , சண்டை போட்ட போது அவரை இந்தப் பதிவர் பதிலளித்து திட்டியது...வேறெப்படி " அன்னாரின் ஜாதியை சொல்லித்தான் "

இத்தனைக்கும் தன்னுடைய பதிவில் வரும் அப்படிப் பட்ட கமெண்டுகளை டெலிட் செய்யும் வசதி இருந்தும், செய்யாமல் அப்படிப் பின்னூட்டத்தை தானே அனுமதித்து ..அதற்கு பதிலாக ஜாதியை குறிப்பிட்டு திட்டுவது என்ன எழவு கலாசாரமோ தெரியாது.

இவனுகளெல்லாம் தான் ஜாதியில்லாத சமுதாயத்தை உருவாக்க முன்னிற்கின்ற புனித பிம்பன்களாம்..மூத்த , முற்றிய பதிவர்களாம்...சரிதானுங்க :)

இந்தப் பதிவு முழுக்க வலையில் பார்த்த விஷயத்தை எழுதும் கண்ணோட்ட உளவியல் சம்பத்தப் பட்டது.புதிதாக ஒன்றுமில்லை.இதை வலை படிக்கும் எல்லோரும் பார்த்திருப்பார்கள்தான்.அதையே கொஞ்சம் அனைவரும் யோசிக்கும் வண்ணம் எடுத்து இயம்பியிருக்கின்றேன்.

யாரேனும் பதிவர் , இந்தப் பதிவு அவர்களை சொல்வதாக கருதினால், இந்த மாதிரி கீழ்த்தர எண்ணம் கொண்ட "திருட்டு ஆண்டை" மனோ பாவம் கொண்டு வெளி வேஷம் போடுகிற குழுவில் அவரும் ஒரு உறுப்பினராக அவரே உணர்வதற்கு நான் பொறுப்பல்ல. உங்களது தவறை அக்கரையாக சுட்டிக்காட்டிய அந்த நன்றிக் கடனோடு திருந்தப் பாருங்கள்.

5 comments:

')) said...

Fair means " a level playing Ground "

Anonymous said...

:-)))))))))))

சிப்பு சிப்பா வருது

Anonymous said...

http://govikannan.blogspot.com/2008/01/blog-post_27.html

அந்த ஆளு தான் வேலை வெட்டி இல்லாம, பரபரப்புக்காக ஏதோ ஒண்ணை பதிஞ்சு விலம்பரம் தேடறார்னா, நீங்க வேற அவருக்கு பதிலாக ஒரு பதிவு போட்டு உங்கள் நேரத்ததை வீணடிப்பது ஏனோ?

இருந்தாலும், நல்லாத் தான் எழுதியிருக்கீங்க :)

')) said...

//ஒரு பதிவர் அப்படியே புரட்சி வழித்தோன்றலாக தன்னை எண்ணி புளகங்கிதம் அடைந்து //

வேலன் அய்யா,
இந்த அய்யா சிங்கை ஃப்ராட் னாக்க,மெய்யான "வலையுலக சிக்மன் ஃப்ராய்ட்" பட்டத்தை யாருக்கு கொடுப்பது?வெளியே மிதப்பவருக்கா,ஓசையோட செல்லமா இருப்பவருக்க்கா அல்லது பாரிஸ் யோனி, தப்பு தப்பு, ஞானிக்கா?சொல்லுங்கய்யா.

பாலா

Anonymous said...

இவனுக்கெல்லாம் கொள்கை புண்ணாக்கு எதுவும் கிடையாது.

நல்லவன் மாதிரி வேஷம் கட்டிக்கிட்டிருந்தானுங்க.

இப்ப எல்லா குட்டும் வெளிப்பட்டு அவனவன் ஆப்படிக்கிறான்.

இதுக்கப்புறமும் திருந்துவானான்னா இல்லை.கொஞ்சநாள் அடக்கி வாசிச்சுட்டு புதுசா ஆரம்பிப்பானுங்க.