Thursday, February 28, 2008

சுஜாதாவின் மரணம் மற்றும் TBCD போன்றவர்களின் பதிவுகள்

""சுஜாதாவின் சில அரசியல் நிலைப்பாடுகள், அதிரடி புறந்தள்ளல்கள், பிரபலங்கள்/ஆளுமைகளுக்கு அவர் காட்டும் அதீத சாய்வு, திரைப்படங்களில் வந்த சில கருத்தமைவுகள் போன்றவை குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், சுஜாதாவின் நீண்ட நெடுங்காலத் தமிழ்ப் பங்களிப்பு அவற்றையெல்லாம் விட பிரமாண்டமானது, முக்கியமானது. என்றும் நிலைத்திருப்பது. வாழ்க அவர் புகழ் """

காசி ஆறுமுகத்தின் இந்த வரிகள் சுஜாதா என்கின்ற தமிழ் எழுத்தாளர் அவரது கருத்து ,பார்வை இவற்றோடு ஒத்துப் போகாதவரும் தமிழுக்கு அவரின் பங்களிப்பை மறுக்கமாட்டார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு.

இன்னும் இது போல சுஜாதாவை பார்பனர் என்றும் பார்ப்பனீயத்தை கடை பிடித்தவர் என்றும் எதிர்க்கும் பலரும் கூட அவரது தமிழ் இலக்கிய உலகிற்காற்றிய சேவையை மறுதலிக்கவில்லை.மாறாக அவர் மறைந்த இத்தருணத்தில் நினைவு கூர்ந்துள்ளதை பல பதிவுகளின் வாயிலாக காண முடியும்.

ஆனால் இந்தத் தருணத்தை பயன் படுத்தி " சீப் பப்ளிசிடிக்காக மட்டுமே " அவரை தமிழ் துரோகி என்றெல்லாம் பதிவு போட்டுள்ள TBCD என்ற பதிவரின் புளகாங்கிதம் அடைய வைக்கும் தமிழ் பற்று பிரமிக்க வைக்கிறது.

தமிழ் வலைப் பதிவில் மறை கழண்டு சுற்றித் திரியும் சில போலி கம்யூனிச வியாதிகளைத் தவிர வேறு யாரும் அவர் கருத்தை ஆதரிக்கவில்லை என்பதிலிருந்தே இது எவ்வளவு கேவலமான ஒரு எண்ணம் என்று தெரிந்து கொள்ளலாம் .

இருந்தாலும் TBCD "இது என்ன இழவு வீடா" என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் . ஆமாம் ..இது இழவு வீடுதான்..சுஜாதா என்கின்ற தமிழ் இலக்கியகர்த்தாவை இழந்து தவிக்கும் இழவு வீடுதான்.

அந்த இழவு வீட்டில் பிணத்தின் நெற்றிக்காசை திருட்டுத் தனமாக திருட வந்த கயமை உங்கள் பதிவு.

தூ ..இதெல்லாம் ஒரு பொழைப்பா?

7 comments:

')) said...

என் தமிழ் படிக்கும் ஆர்வத்தை வளர்த்த சுஜாதா ரங்கராஜன் என்னும் மா மனிதரின் மறைவுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறேன்.

தமிழ் உள்ள வரை அவர் புகழை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது

Anonymous said...

காசிய எதுக்கு வீணா இதுல இழுக்கறே? முதலில் கொண்டைய மறைங்கோ நோண்டு சார்வாள்.முரளி மனோஹரா எழுதி செருப்படி வாங்கியது மறந்து விட்டதா நோக்கு?

')) said...

இல்லை..எழுத்து என் பிழைப்பு இல்லை..

ஒரு கிளாஸ் ஐஸ் வாட்டார் சாப்பிடுங்க..சரவணக்குமார். :D

')) said...

////TBCD said...
இல்லை..எழுத்து என் பிழைப்பு இல்லை..///

இருந்துட்டாலும் தமிழ் வெளங்கிரும்

////ஒரு கிளாஸ் ஐஸ் வாட்டார் சாப்பிடுங்க..சரவணக்குமார். :D////

சுஜாதா மறைவுக்கு இவ்வளவு இரங்கல்களா என்று வயித்தெரிச்சல்ல பதிவு போட்டவர்கள்தான் ஐஸ் வாட்டர் சாப்பிடணும்.

')) said...

சுஜாதா என்கின்ற 'தமிழ் இலக்கியகர்த்தாவை' இழந்து தவிக்கும் இழவு வீடுதான். - சரவனக்குமார்.

'தமிழ் இலக்கியகர்த்தா' என்ற உவமை - இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா
தெரியவில்லையா?


'அந்த இழவு வீட்டில் பிணத்தின் நெற்றிக்காசை திருட்டுத் தனமாக திருட வந்த கயமை உங்கள் பதிவு.'
-சரவனக்குமார்.

நெற்றிக்காசை திருடுவதும்- திடுடவிடுவதும் - திருடி பங்குபோட்டுக்கொள்வதும் - இழவு வீட்டில் கூடியிருக்கிறவர்களால் மட்டுமே முடியும். TBCD தான் இழவு வீட்டுப்பக்கம் - காலை வைக்க கூட மறுத்துவிட்டாரே!

Anonymous said...

///பிறைநதிபுரத்தான் said...

நெற்றிக்காசை திருடுவதும்- திடுடவிடுவதும் - திருடி பங்குபோட்டுக்கொள்வதும் - இழவு வீட்டில் கூடியிருக்கிறவர்களால் மட்டுமே முடியும். TBCD தான் இழவு வீட்டுப்பக்கம் - காலை வைக்க கூட மறுத்துவிட்டாரே!////

செம லாஜிக்குமா பிறைநதிபுத்திரன்..நாளைக்கு உங்க ஊட்டுல எதுனா திருடு போனா ஊட்ல இருக்குரால்லாரும் போலிச் லாக் அப்புல போய் குந்திகுங்க நாங்கதான் அந்த வீட்டுல இருந்தோமுன்னு.சரியா?

அப்பாலிகா " இழவு வூட்டுல திருட்டுத் தனமாக திருட வந்தது போல " அப்படீனூதான் பதிவுல போட்டுருக்காரு ..நல்லா படிங்க.படிக்காமலேயே அவரு காலை வக்கலை கையை வக்கலை அப்படீன்னு சொல்லாதீங்க,,ஏன்யா சப்போர்ட் பண்ணுற மாதிரி ஆப்பு வாங்கிக் குடுக்குறீங்க?அவரே சும்மா இருந்தாலும் புண்ணாக்கி விடாம போக மாட்டீங்க போல.

')) said...

சமூகத்தின் மேலான சுஜாதாவின் பார்வை, மற்றும் அவரது சாதிவெறிகளால் அவரைப் பன்னியிலும் கீழாயே அவரை தூற்றுவேன்.

தமிழுக்கு அவர் செய்த சேவையை என்று நினைவு கூர்வேன். தமிழுக்கு அவர் செய்த சேவைகள் அளப்பரியன. அவ்வளவுதான்.