Saturday, April 12, 2008

ஆற்காட்டாரின் காலை டிபன் லிஸ்ட்

அடிக்கடி தமிழக அமைச்சர்கள் ஏதாவது தத்துவ முத்து உதிர்த்து காமெடி பண்ணுவாங்க. இதுல தலை சிறந்தவர் "ஆற்காடு வீராசாமி" இவரு ஏற்கனவே உதுத்திருந்த சிந்தனை முத்துக்களை " http://velanvelan.blogspot.com/2007/10/blog-post_02.html " என்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவரது அறிவுத் திறன் பற்றிய நமது கணிப்புக்கு சற்றும் ஏமாற்றம் தராத வகையில் நேற்றும் அவர் உதிர்த்த தத்து(பித்து)வ முத்துக்கள் கீழே.


" ஒரு குடும்பத்தில் காலையில் எழுந்து ஒரு பெண் அடுப்பாங்கரைக்குச் சென்றால், தனக்கு டீ, கணவருக்கு காபி, மாமியாருக்கு ஹார்லிக்ஸ், மாமனாருக்கு பூஸ்ட் போடவேண்டும். டிபன் என்றால், இட்லி, தோசை, பூரி, பொங்கல் என்று ஆளாளுக்கு விதவிதமாக செய்ய வேண்டி உள்ளது. இதைத் தவிர்க்க, காலையில் காபி அல்லது டீ போன்ற ஒரே பானம், டிபன் என்றால் இட்லி அல்லது தோசை போன்று அனைவருக்கும் ஒரே வகையான உணவு மட்டும் தான் என்று, பெண்கள் கண்டிஷனாக சொல்ல வேண்டும். அப்போது தான், காலையில் இருந்து இரவு வரை அடுப்பாங்கரையில் கிடப்பதைத் தவிர்க்க முடியும். இதன்மூலம் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் சேர்ந்து வருமானத்தை ஈட்ட வேண்டும்."


ஒவ்வொரு வேளையும் ஹார்லிக்ஸ் , பூஸ்ட்,காபி, டீ என விதவிதமாக குடிக்கும் மற்றும் ஒவ்வொரு வேளையிலும் இட்லி,தோசை, பூரி , பொங்கல் என்று நாலு விதமான டிபன் செய்து சாப்பிடும், குடும்பத்தில் உள்ளவர்கள்தான் "பெண்கள் சுய உதவிக் குழு"க்களில் சேர்ந்து வருமானம் ஈட்டக் கூடிய நிலையில் இருக்கிறார்களா? அடடா அமைச்சரின் அறிவுத் திறத்தை எத்தனை பாராட்டினாலும் தகும். ஒரு வேளை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர் வீட்டு சமையலரையில் நுழைந்து பார்த்து விட்டு அதுதான் ஒட்டு மொத்த தமிழகத்தின் நிலைமை என்று நினைத்து விட்டாரோ ?


இவர் சொன்னதைப் பார்த்தால் ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது . பென்ஸ் காரில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பணக்கார சிறுவன் சிலர் தெருவில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து கார் டிரைவரிடம் கேட்டானாம் " இவர்களெல்லாம் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் " என்று. டிரைவர் "சாப்பிட சாப்பாடு கிடைக்கவில்லை, அதனால் பிச்சை எடுக்கிறார்கள்" என்றாராம். அதற்கு சிறுவன் " சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் என்ன ? ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போய் டிபன் சாப்பிட வேண்டியதுதானே" என்றானாம் .அதுமாதிரி இருக்கு ஆற்காடு வீராசாமி சொல்வது :))

3 comments:

')) said...

நீங்களும் இங்கே பேசலாம் :)

')) said...

ஆற்காடு,இந்தியப் பண்பாட்டின் எதிரி.அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்ற தத்துவத்தை உணராத தற்குறி.

')) said...

ஜாலி ஜம்பர்

என்னவோ சொல்ல வர்ரீங்க..என்னன்னுதான் புரியலை :(

பெண்கள் படிப்பு பத்தி ஆற்காட்டாரும் நேத்து ஒண்ணும் சொல்லலை . இந்தப் பதிவிலேயும் ஒண்ணையும் காணோம் :)