Sunday, April 13, 2008

சித்திரைத் திருநாள் / சர்வதாரி புத்தாண்டு வாழ்த்துக்கள்

இன்று சர்வதாரி ஆண்டின் முதல் நாள் மற்றும் சித்திரைத் திரு நாள்


சித்திரைத் திருநாளைப் பற்றி மதிமுக தலைவர் வைகோ பின் வரும் கருத்தை கூறியுள்ளார்.

""மழையும், குளிரும், பனியும் மறைந்து மஞ்சள் வெயில் கண்டு உயிரினங்கள் கொஞ்சிக் குதூகலிக்க வையகம் சிலிர்க்கும் இளவேனிலின் வருகைக்குக் கட்டியம் கூறி இத்தரை மகிழ்ந்திட சித்திரை மலர்ந்துள்ளது.

தமிழர் வாழ்வோடும், வரலாறோடும் பின்னிப் பிணைந்த சித்திரையின் மாட்சிக்கு எத்தனையோ சாட்சியங்களை இலக்கியங்கள் கொண்டுள்ளன.

இந்திர விழா, வசந்த விழா என்றெல்லாம் கொண்டாடி களித்தது இச் சித்திரைத் திருநாளில்தான். திங்களையும், செங்கதிரையும் மாமழையையும் போற்றி இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்ந்த தமிழரின் சிறப்புக்குச் சித்திரைத் திருநாள் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

மதிமுக சார்பில் தமிழ்ப் பெருமக்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.""


வைகோவின் இந்தக் கருத்துடன் ஒத்துப் போவதுடன், எந்த நாளையும் மக்கள் மகிழ்சித் திருநாளாகக் கொண்டாடுவதிலோ , தெய்வ நம்பிக்கை இருப்பின் சிறப்பு வழிபாடு செய்வதிலோ தடையேதும் இல்லை என்ற கருத்தை வலியுருத்தும் விதமாய் இந்தநாளை, சித்திரை திருநாளாகவோ சர்வதாரி ஆண்டுப் பிறப்பாகவோ கொண்டாடும் அனைவருக்கும் " வாழ்த்து" தெரிவிக்கிறேன்.

மக்கள் மகிழும் எந்த நாளும் புது நாளே எந்த நாளும் திரு நாளே என்பதை அனைவரும் உணரவேண்டும்.மகிழ்ச்சித் திருநாளை, வழிபாடுகளை மற்றும் அடுத்தவர் நம்பிக்கைகளை " தனது கொள்கை / தனது தலைவனுக்கு வால் பிடித்தல் " போன்ற காரணங்களுக்காக முட்டாள்தனம் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சொல்ல தலைப்பட்ட " சில மூடர்களுக்கும்" புத்தி தெளிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

9 comments:

')) said...

வருக..அனைவருக்கும் திருநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

')) said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள் சரவணகுமார்.

')) said...

தங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி பினாத்தல் சுரேஷ்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.சர்வதாரி ஆண்டில் கல்வி தழைக்குமாம்.உங்கள் குடும்பத்தில் கல்வி கற்போர் சிறப்புடன் விளங்கவும் வாழ்த்துகிறேன்.

')) said...

வைகோவை கோமாளியாக்கிய புரட்சித்தலைவிக்கும்,அவரை இன்னும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் உங்களுக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

Anonymous said...

தமிழர்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகளும் தமிழ் பார்ப்புகளுக்கு புத்தாண்டு வாழ்த்துகளும். நன்றி.

')) said...

//மகிழ்ச்சித் திருநாளை, வழிபாடுகளை மற்றும் அடுத்தவர் நம்பிக்கைகளை " தனது கொள்கை / தனது தலைவனுக்கு வால் பிடித்தல் " போன்ற காரணங்களுக்காக முட்டாள்தனம் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சொல்ல தலைப்பட்ட " சில மூடர்களுக்கும்" புத்தி தெளிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
//
புத்தி தெளியும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவர்களுக்காக அந்த மாயோனை பிரார்த்திக்கிறேன்! தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !

')) said...

ஜாலிஜம்பர்

யாரெல்லாம் கோமாளிகள் என்பது அவரவர் பார்வையைப் பொருத்தது.

மேலும் " எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு " என்று வள்ளுவன் சொன்னது படித்திருப்பீர்கள்.

அதனால் என்னுடைய நிலைப்பாடெல்லாம் சொன்ன கருத்து சரியா தவறா என்பதைப் பொருத்தே ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதெல்லாம். " தலைவன் " சொன்னான் என்பதற்காக சொன்னது எல்லாமே சரி என " தொங்கிக் " கொண்டிருக்க மாட்டேன்

பாருங்களேன் "நீங்களும் சித்திரைத் திருநாள் வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள். அதே தான் வை கோவும் சொல்லியிருக்கிறார். எதிரணியில் இருப்பதால் ஒத்த கருத்தை சொன்னவரும் " கோமாளி " என கேலி பேசப் படுகிறார்.

சித்திரைத் திருநாளில் கடவுள் உங்களுக்கு நல்லன அனைத்தும் அருள் புரிய வேண்டுகிறேன்.

')) said...

அனானி

உங்களுக்கும் இந்நன்நாளில் எதனைக் கொண்டாடுகிறீர்களோ அதற்கான வாழ்த்துக்கள். கொண்டாடுவதும் மகிழ்ச்சியுமே முக்கியம். " எவனோ சொன்னான் " என்பதற்காக குடும்ப மகிழ்ச்சியை காவு கொடுத்து விடாதீர்கள்.

')) said...

enRenRum-anbudan.BALA

அந்த மாயோன் உங்களுக்கு நினைத்த காரியம் நிறைவேற அருள் புரியட்டும்

தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.