Sunday, August 03, 2008

இவரை நல்லா பாத்துக்குங்க


சென்னை, ஆக. 3-
புழல் ஜெயிலில் கைதிகளுக்கு வசதிகள் செய்து தருவதற்காக லஞ்சம் வாங்கிய ஜெயில் வார்டன் கைது செய்யப்பட்டார்.
சென்னை புழல் ஜெயிலில் 2-வது நிலை வார்டனாக பணிபுரிந்து வந்தவர் சாலமோன் (வயது 30). ஜெயிலில் இருக்கும் கைதிகளுக்கு செல்போன் மற்றும் போதைப் பொருட்கள் கொடுத்து லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன. கைதிகளுக்கு பொருட்களை கொடுப்பதற்காக கைதிகளின் உறவினர்களிடம் ஆயிரக் கணக்கில் சாலமோன் பணம் வாங்குவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது.
இந்த நிலையில் சென்னை வடபழனியை சேர்ந்த சங்கர் என்பவர் சாலமோனை சந்தித்தார். தனது நண்பன் அந்தோணி, போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளதாகவும், அவருக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் சாலமோனிடம் சங்கர் கேட்டுள்ளார். அந்தோணிக்கு படுக்கை, மின்விசிறி, மது வசதிகளை செய்து கொடுப்பதற்கு பணம் தருவதாகவும் கூறி இருக்கிறார்.
ரூ.8 ஆயிரம் பணம் கொடுத்தால் வெளியில் உள்ள அதே சொகுசு வாழ்க்கையை உள்ளேயும் செய்து தரலாம் என்று சாலமோன் சம்மதித்தார். இந்தப் பணத்தை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே குறிப்பிட்ட இடத்தில் வைத்துத் தர வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதைத் தெரிந்து கொண்ட போலீசார், சாலமோனை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். சாலமோனைப் பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நடராஜன், திருநாவுக்கரசு மற்றும் இன்ஸ்பெக்டர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை சங்கரிடம் கொடுத்து, அதை சாலமோனிடம் கொடுக்கக் கூறினர்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ரசாயனம் தடவிய பணத்துடன் சங்கர் கோயம்பேடு சென்றார். அங்கு ஏற்கனவே தனிப்படை போலீசார் சாதாரண உடையில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் சாலமோன் அங்கு வராமல், விருகம்பாக்கம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்-க்கு சங்கரை வரக் கூறினார். இந்தத் தகவலை போலீசிடம் கூறி விட்டு, அங்கு சங்கர் சென்றார்.
பிறகு தன்னிடம் உள்ள ரூ.8 ஆயிரம் பணத்தை எடுத்து சாலமோனிடம் கொடுத்தார். அதை சாலமோன் வாங்கி பைக்குள் வைக்கும் போது, போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர். தப்பி ஓட முயற்சித்த அவரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் சிலர், செல்போன் மூலம் வேறு சிறையில் உள்ள மற்ற தீவிரவாதிகளுடன் செல்போனில் பேசிய தகவல் சமீபத்தில் வெளியானது.
இதற்கும் சாலமோன் உடந்தையாக இருப்பாரோ? என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்தது. பின்னர் சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

படம் : நன்றி-தினமலர்
செய்தி: நன்றி-தினத்தந்தி

தேடப்படும் குற்றவாளிகள் அப்படீனெல்லாம் போலிஸ் ஸ்டேஷன்ல போட்டோவெல்லாம் மாட்டுறாங்கல்ல.அது மாதிரி தப்பு செஞ்ச போலிஸ்காரங்க போட்டோவெல்லாம் மாட்டுறதுக்கு எதுனா இடம் இருக்கா?


எதுக்குன்னா..ஆத்திர அவசரத்துக்கு , எந்த வேலைக்கு யாருகிட்ட போனா நடக்கும் ? ரேட்டு என்ன ரேன்ச்ல இருக்கும் அப்படீன்னு மக்களுக்கு ஒரு ரெஃபரென்ஸுக்கு உபயோகமா இருக்குமுல்ல?