Tuesday, October 02, 2007

"கேக்குற" மாதிரி "காதுல" போட்டு வைக்கக் கூடாதா?

அரசியல் என்றாலே அறிக்கை , பதில் அறிக்கை, சவால், சவாலுக்கு சவால் என்றாகி விட்டாலும் ரொம்ப காமடி பண்ணா சுட்டிக்காட்டாம இருக்க முடியலை.தி மு க தலைமையில் நேற்று நடந்த உண்ணா நிலைப் போராட்டத்தின் போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதிலிருந்து சில துளிகள்(சிவப்பில் கொடுக்கப்பட்டது அவர் மேடையில் சொன்னது)


///ஜெயலலிதாவின் வற்புறுத்தலினால் தி.மு.க., அரசை 89ம் ஆண்டு அப்போதைய பிரதமர் சந்திரசேகர் கலைத்தார். நாம் தேர்ந்தெடுத்த ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு தமிழத்தில் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தோம். அவர் ஒன்றும் கலைக்க மாட்டார். ///

ஏற்கனவே ஜனாதிபதியை சரிக்கட்டி வச்சுருக்கோம் அப்படீன்னு சொல்ல வர்ரீங்களா?


////மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் மதிக்கிற தலைவர் கருணாநிதி. அவர்கள் இருக்கும் வரை சுப்ரீம் கோர்ட் என்ன, ஐ.நா., சபை சொன்னாலும் தி.மு.க., ஆட்சியை கலைக்க முடியாது////

இப்படி வாயக்குடுத்து ஏன் நீங்களே மாட்டிக்கிறீங்க? இப்ப ஐ நா சபையை எதுக்கு இழுக்கணும் ?

///அத்வானி ராமேஸ்வரத்திற்கு வரட்டும். அவர்களை நீர்மூழ்கி கப்பலில் அழைத்து செல்கிறோம். அங்கு பாலம் இருந்தால் காட்டட்டும். கப்பல் அங்கு ஓடத் தான் போகிறது. சோனியா, மன்மோகன் சிங் கொடி அசைக்க வரவுள்ளனர். கப்பலில் டி.ஆர்.பாலு மாலுமியாக இருப்பார்///

அந்த இடத்துல தண்ணிக்கு மேல கப்பல் போறதுக்கே ஆழம் பத்தாது.மணல் திட்டா இருக்கு.அங்க கப்பல் போறதுக்கு கால்வாய் வெட்டத்தான் இந்தப் போராட்டமே அப்படீன்னு உங்க " காதுல விழுகுற மாதிரி " யாருமே சொல்லலியா? கப்பலே ஓட முடியாத இடத்தில நீர் மூழ்கிக் கப்பல்ல கூட்டிக்கிட்டு போறேன்றீங்களே.

அது சரி, கப்பலில் டி ஆர் பாலு மாலுமியாக இருப்பார் அப்படீங்குறீங்களே.. அவர் எந்தக் காலேஜில் மரைன் இன்ஜினீரிங் படிச்சார் அப்படீன்னு தலைவர் கேக்க மாட்டாரா? ராமரை மட்டும்தான் கேப்பாரா ?

மேடை கிடச்சு மைக் கிடைச்சு முன்னாடி ஒரு கூட்டமும் பக்கத்துல ஒரு தலைவரும் இருந்துட்டா என்ன வேணா காமடி பண்ணலாம் அப்படீங்குறதை நிறுத்தி என்னைக்கு அறிவு பூர்வமா பேசுவாங்களோ இந்த அரசியல்வாதிங்க.

6 comments:

')) said...

ரொம்ப கரீக்ட்டுபா,

நம்ம மாமேதை சு.சாமி ராமர் பாலத்துக்கு LTTEயால் ஆபத்து. எனவே இந்திய கப்பல் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டதை விடவா இது பெரிய காமெடி?

')) said...

///அருண்மொழி said...
ரொம்ப கரீக்ட்டுபா,

நம்ம மாமேதை சு.சாமி ராமர் பாலத்துக்கு LTTEயால் ஆபத்து. எனவே இந்திய கப்பல் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டதை விடவா இது பெரிய காமெடி?///

சு சாமி சொன்னது காமெடி என்றால் இதுவும் காமெடிதான் என்று ஒத்துக் கொள்வீர்களா.

நல்லா கேட்டுக்குங்க..என்னைப் பொறுத்தவரை சு சாமி ஒரு காமெடியந்தான்..மேலே அவர் சொன்னது அக்மார்க் காமெடிதான்.

எங்கே இப்போ ஆற்காட்டார் சொன்னதைப் பற்றி கதையுங்க கேட்போம்.

')) said...

ஆற்காட்டார் பேசியது நிச்சயமாக காமெடி இல்லை :-)

You have quoted 3 points.

1) பிரதீபா பாட்டீல் மீது அடுக்கடுக்கான ஊழல், கொலை குற்றச்சாட்டுகளை சுமத்திய பா.ஜ.கவினரே அவரிடம் காவடி எடுத்து செல்லும் நிலை இருக்கையில், இவர் நம்ம ஆள்தான் ஜனாதிபதி என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளார்.

2) ஐ.நா சபை என்று சொல்லியது வருமுன் காக்கும் திட்டம்தான். ஜெவும், சு.சாமியும் ஜார்ஜ் புஷ் வரை போவார்கள் என்பதால் அவர் இவ்வாறு பேசி இருக்கலாம்.

3) ராமர் கட்டிய பாலம் இருக்கும் போது, அதன் அடியில் நீர்முழுகி கப்பல் செல்வதற்கு ஓட்டைகள் இருக்காதா என்ன? (they might navigate the submarine between the pillars of ram sethu). அது எப்படி தவறாகும்?

')) said...

///அருண்மொழி said...
ஆற்காட்டார் பேசியது நிச்சயமாக காமெடி இல்லை :-)///

பதில் வேறு மாதிரியாக இருந்தால்தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். விசுவாசம் நல்ல விஷயம்தான்.

')) said...

///அருண்மொழி said...
ஆற்காட்டார் பேசியது நிச்சயமாக காமெடி இல்லை :-)///

ஏன்பா சரவணகுமார் அவர் சொல்லறதுலயும் ஒரு நியாயம் இருக்குல்ல :)))))))))))))))))

')) said...

//3) ராமர் கட்டிய பாலம் இருக்கும் போது, அதன் அடியில் நீர்முழுகி கப்பல் செல்வதற்கு ஓட்டைகள் இருக்காதா என்ன? (they might navigate the submarine between the pillars of ram sethu). அது எப்படி தவறாகும்?//

அட நம்ம அருண்மொழியும் பெரிய சிந்தனையாளர் போல... பெரிய ரூம் போட்டு யோசிப்பவர் போல ;)