Monday, October 01, 2007

நெருப்புடன் விளையாடாதீர்கள்-உச்ச நீதி மன்றம் நெத்தியடி

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை விரைவில் மேற்கொள்ள வலியுறுத்தி தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகத்தில் இன்று நடக்க இருந்த `பந்த்'க்கு சுப்ரீம் கோர்ட் நேற்று தடை விதித்தது.

மூன்று மணி நேரம் கடுமையான விவாதம் நடந்தது. விவாதத்தின் போது பல முறை குறுக்கிட்ட நீதிபதிகள் மிகவும் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

இந்த நாட்டில் இது தான் பிரச்னையாக உள்ளது. இந்த நாட்டில் அனைத்து விஷயங்களையும் இரும்பு கரம் கொண்டு சமாளிக்க வேண்டி உள்ளது. இல்லாவிடில் எந்த வேலையும் நடப்பதில்லை. சட்டசபையோ, நீதித்துறையோ எதுவாக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு தான் சமாளிக்க வேண்டி உள்ளது. பந்த் நடத்துவது சட்டவிரோதமானது என்று கேரள ஐகோர்ட்டின் முழு பெஞ்ச் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை 1998ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டும் ஏற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், இந்த நாட்டில் கோர்ட் உத்தரவுகள் மீறப்படுவது வருத்தத்துக்குரியது. அனைத்து விஷயங்களையும் கோர்ட் தான் கண்காணிக்க வேண்டும், தடுக்க வேண்டும், நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைக்கு நாம் வந்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டின் எந்த உத்தரவும் பின்பற்றப்படுவதில்லை என்ற நிலை இருக்கும் போது ஐகோர்ட் உத்தரவுகளை பற்றி என்ன கூற வேண்டி உள்ளது. ஐகோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளில் 99 சதவீத உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை. பந்த்துக்கு சுப்ரீம் அக்டோபர் ஒன்றாம் தேதி பந்த் நடக்கவில்லை. `ஹர்த்தால்' என்ற கடையடைப்பு தான் நடக்கிறது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பந்த் என்று வந்து விட்டால் அரசியல் சட்டத்தின்படி செயல்பட வேண்டிய அனைத்து துறைகளும் ஸ்தம்பித்து விடும். அக்டோபர் ஒன்றாம் தேதி, அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படும் என்று தான் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டம், முதல்வர் தலைமையில் நடந்துள்ளது. எனவே, அக்டோபர் ஒன்றாம் தேதி நடக்க இருப்பது பந்த் அல்ல என்று எப்படி கூற முடியும். அன்றைய தினம் பொது கூட்டம் தான் நடக்கிறது என்ற வாதத்தையும் ஏற்க முடியவில்லை. பொது கூட்டம் எங்கே நடக்கிறது என்பதை காட்டுங்கள். அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவது என்று தான் கூட்டணி கட்சிகளின் கூட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. உங்கள் வலிமையை காட்ட நீங்கள் நினைக்கிறீர்கள். அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை ஏன் மூட வேண்டும்? அனைத்தையும் மூடி விட்டால் கூட்டம் நடத்த எங்கு இருந்து மக்கள் வருவார்கள்?தி.மு.க., கூட்டணி கட்சிகள் தங்கள் வலிமையை காட்ட தான் பந்த் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. யாருக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளீர்கள்? சேது சமுத்திர கால்வாய் திட்டத்துக்கு எதிராகவா? மத்திய அரசுக்கு எதிராகவா அல்லது இந்த கோர்ட்டுக்கு எதிராகவா? மக்களுக்கு எவ்வித பாதிப்பும் பந்த் நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது என்ற வாதத்தையும் ஏற்கும்படியாக இல்லை. பந்த் நடத்துவது சட்ட விரோதமானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று இந்த கோர்ட் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தனிநபரோ அல்லது ஒரு அமைப்போ பந்த் நடத்த அழைப்பு விடுப்பது குறித்து தான் இந்த கோர்ட் கவலை கொண்டுள்ளது. பந்த் நடந்தால் பொது வாழ்க்கை ஸ்தம்பித்து போய் விடும். அரசியல் சட்டத்தின் 19வது பிரிவு( பேச்சு சுதந்திரம்), 21வது பிரிவு( சுதந்திரத்தின் உரிமை) ஆகிய அடிப்படை உரிமைகளை இது மீறும் செயல். சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் மேற்கொள்ள தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தற்போது தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த மனு, திட்டத்தை மாற்று வழியில் மேற்கொள்வது பற்றி அல்ல. பந்த் சட்டப்படி செல்லத்தக்கதா என்பதை முடிவு செய்வது பற்றி தான் தற்போது விவாதிக்கப்படுகிறது. பந்த் சட்டவிரோதமானது என ஏற்கனவே இந்த கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அக்டோபர் ஒன்றாம் தேதியோ அல்லது வேறு தினத்திலோ தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பந்த் நடத்த அனுமதிக்க முடியாது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு (பந்த் சட்டவிரோதம்) தான் இறுதியானது. அந்த உத்தரவு குறித்து இந்த கோர்ட்டின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தான் முடிவு செய்ய முடியும். பந்த்துக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்க முடியாது. அது அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு செய்யும் செயல். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல். இந்த கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவுக்கு அரசு வேறு அர்த்தத்தை தரக் கூடாது. உத்தரவை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். எச்சரிக்கையாக இருங்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

செய்தி சாராம்சம் : தினமலர் :01/10/07
------------------------------------------------------------------------------------------------

"அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் செருப்படி" என்றுதான் தலைப்பு வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் அதை நேரடியாக சொல்வது அரசியல் நாகரீகம் இல்லை என்பதால் "நெத்தியடி" என்று போட்டேன். எப்படி அடிச்சாலும் புத்தி வரவா போகுது ??????!!!!!!!!!!

13 comments:

')) said...

உச்ச நீதி மன்றத்திலிருந்து , பொதுசனம் வரைக்கும் யாரை எதுத்து பந்த் அப்படீன்னு "புள்ளிராசாவுக்கு எய்ட்ஸ் வருமா" கணக்க கூவுராங்களே..கொஞம் தயவு பண்ணி சொல்லிரக் கூடாதா...இல்லை உங்களுக்கே தெரியாதா?

')) said...

உச்ச அநீதி மன்றத்திற்கு தமிழக மக்கள் செருப்படி என்றுதான் பதிவரின் பாஷையிலே சொல்லியிருக்க வேண்டும்.என்ன செய்வது நமக்கு மரியாதை அந்தந்த பதவிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றிருக்கிறதே.

யாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் படுகிறது.பாவம் வாழைப் பழத்தை வாயில் வைத்தால் கடிக்கத் தெரியாதவர்கள் கேட்கிறார்கள்.

யார் யார் எப்பாடு பட்டாவது தமிழர்களுக்குப் பயன் படும் சேதுக் கால்வாய் திட்டத்தைத் தடுக்கத் திட்டமிட்டுச் சூழ்ச்சி செய்கிறார்களோ அவர்களுக்குச் செருப்படி போலக் கொடுப்பதுதான் இந்த எதிர்ப்பு.

எத்தனை எத்தனை பொய்கள்,வித விதமான பொய் ஆதாரங்கள்,கடைசியாக ஆதாம் பாலம்,ராமர் சேதுவாகி,ராமர் பாலமாகி,ராமரே அவமானப் படுகிறார்.

வேறு வழியில் கப்பல் ஓட வேண்டுமாம்.அவர்கள் தலையிலா ஓட்ட முடியும்?

')) said...

" எப்படி அடிச்சாலும் புத்தி வரவா போகுது ??????!!!!!!!!!!"

யாருக்கு? ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கும் நமக்கா? இல்ல அவுங்களுக்கா?:)

')) said...

யெய்யா நெத்தியடி,

யாரையும் எதுத்து வேலைநிறுத்தம் பண்ணல,

திட்டத்த சீக்கிரம் நிறைவேத்த சொல்லி
பந்த் நடக்குது.

தமிழ்நாட்டோட சாபக்கேடு என்னான்ன,
யாருக்காக போராடுறோமோ அவுங்களே
ஆதரவு தற்ரதில்ல.

ரெண்டு நாளு கொழாயில தண்ணி வரலைண்ணா போராட்டம் பண்றோம்,

ஆனா தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி செய்கின்ற திட்டத்துக்கு தடை வரும்போது சோத்தாலடித்த பிண்டங்களா நிக்கிறீங்க .போரடுறவங்களையும்
ஆயிரம் குறை சொல்றீங்க.

')) said...

"Thamizhan said...

" யார் யார் எப்பாடு பட்டாவது தமிழர்களுக்குப் பயன் படும் சேதுக் கால்வாய் திட்டத்தைத் தடுக்கத் திட்டமிட்டுச் சூழ்ச்சி செய்கிறார்களோ அவர்களுக்குச் செருப்படி போலக் கொடுப்பதுதான் இந்த எதிர்ப்பு."


தமிழ் ப்ளாகுல "தமிழன்' அப்படீங்கற பேரை முதல்ல தமிழ்ல போடுங்க Thamizhan .


இப்படி சொன்னா எப்படி...ஆட்சியை உங்க கையில கொடுத்துட்டு "அய்யா நீங்கதான் ஆட்சி பண்ணுறீங்க" திட்டம் போட்டு கமிசன் கிடைச்சா வேகமா நிறைவேத்திறது கமிசன் கிடைக்கலேன்னா மெதுவா நிறைவேத்துறது அல்லாம் உங்க கையிலதான் இருக்கு அப்படீன்னும் நாங்கதான் ஞாபகப் படுத்தணுமா?

நீதி மன்றத்துல தாக்கல் செஞ்ச மனுவை வாபஸ் வாங்கிக்கிட்டு 3 மாதம் அவகாசம் கேட்டதும் நீங்க அங்கம் வகிக்கிற அரசாங்கம்தான் அப்படீன்னும் ஞாபகப் படுத்தணுமா?

இப்ப பந்த் மனுவை வாபஸ் வாங்குனதை எதிர்த்து , மூணுமாசம் அவகாசம் கேட்டு திட்டத்த தாமதப் படுத்துனதை எதிர்த்து அப்படீன்னு சொல்லுங்க. உங்க நேர்மையை பாராட்டுரோம்.

அப்புறம் " அவங்க தலைலியா கப்பல் ஓட்ட முடியும் " அப்படீன்னு கேட்டிருக்கீங்க.முடிஞ்சா கண்டிப்பா ஓட்டிக்குங்க.

')) said...

குசும்பன்

"யாருக்கு? ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கும் நமக்கா? இல்ல அவுங்களுக்கா?:)"

சரியா கேட்டீங்க.
ஸ்மைலி போட்டு கேட்டாலும் இது ஒரு "நெத்தியடி" கேள்வி.

')) said...

யெய்யா பூச்சாண்டி

////

யாரையும் எதுத்து வேலைநிறுத்தம் பண்ணல,

திட்டத்த சீக்கிரம் நிறைவேத்த சொல்லி
பந்த் நடக்குது.////


யாருகிட்ட சொல்லி?
அந்த ராமன் கிட்டையா?

///தமிழ்நாட்டோட சாபக்கேடு என்னான்ன,
யாருக்காக போராடுறோமோ அவுங்களே
ஆதரவு தற்ரதில்ல.///

உங்க ஆளுங்களையும் , கூட்டணிக் கட்சிக்காரங்களையும் இப்படியா சாடை மாடையா திட்டுறது ?Too bad.

///ரெண்டு நாளு கொழாயில தண்ணி வரலைண்ணா போராட்டம் பண்றோம்,///

கண்டிப்பாக...குடும்ப ஆரோக்யத்தை விளையாட்டா எடுத்துக்கலலமா?

///ஆனா தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி செய்கின்ற திட்டத்துக்கு தடை வரும்போது சோத்தாலடித்த பிண்டங்களா நிக்கிறீங்க .போரடுறவங்களையும்
ஆயிரம் குறை சொல்றீங்க.///

இதை கொஞ்சம் திட்ட வரைவோடு விளக்கி சொன்னால் உண்மையில் பலன் இருந்தால் நானும் போராடுவேன்.சும்மா 150 வருஷம் தூங்குனோம்...கனவு கண்டோம் அப்படீன்னு சொல்லாதீங்க.. ப்ளீஸ். உண்மையில் பொருளாதார ரீதியா பயன் தரும் அப்படீன்னு நிரூபித்தால் ராமர் பாலம் மட்டுமல்ல கோதண்ட சாமி கோயில் இருக்காமே வேணுமுன்னா அதையும் சேத்து இடிச்சுக்குங்க

')) said...

அறிவுரைக்கு நன்றி!
ஆரம்பத்தில் தமிழில் போடத்தெரியாமல் ஆங்கிலத்தில் போட்டதாலும் ,ஏற்கனவே
"தமிழன்" என்ற பதிவாளர் இருப்பதாலும்
"Thamizhan"ஆகவே தொடர வேண்டியுள்ளதற்கு வருந்துகிறேன்.பொருத்தருள வேண்டுகிறேன்.

இந்தப் போராட்டம் கூட்டணி ஆட்சியின் உள்ளேயும்,கூட்டணியில் இல்லாத மற்ற சூழ்ச்சிக் காரர்கள் (எங்கெங்கே இருக்கிறார்கள் என்பது நாடறிந்ததே)அனைவர்க்கும் சேர்த்து,அனைத்துத் தமிழின உண்மைத் தலைவர்களால் ஆராய்ந்து எடுக்கப் பட்ட முடிவு என்பதுதான் என் கருத்து.

இந்த சூழ்ச்சியாளர்கள் மாற்றி,மாற்றிப் பாடும் பாட்டுக்களும்,செய்யும் சூழ்ச்சிகளும் உங்களைப் போன்ற அறிவாளிகளுக்குக் கட்டாயம் தெரியும்.
அதற்கு ஒத்தூதுபவர்கள் யார் என்பதும் பெரிய ஆராய்ய்ச்சி செய்ய வேண்டிய செய்தியல்ல.

மணல் திட்டுக்களை வைத்துத் தமிழக மக்களை இன்னும் மடையர்களாக ஆக்க முயல்வோர் மரியாதயுடன் ஒதுங்கிவிட்டால் பிரச்சினையே இல்லை.இதை வைத்து ஆட்சியைக் கவிழ்க்கவும்,அவர்கள் ஆட்சியைப் பிடிக்கவும் அலைவதுதான் பிரச்சினைக்கே காரணம் என்பது தமிழக மக்களின் கருத்து என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டியவர்கள் தெரிந்து நடந்தால் நல்லது,அனைவர்க்கும்.

Anonymous said...

//மணல் திட்டுக்களை வைத்துத் தமிழக மக்களை இன்னும் மடையர்களாக ஆக்க முயல்வோர் மரியாதயுடன் ஒதுங்கிவிட்டால் பிரச்சினையே இல்லை.//

அது சரிங்க... அப்புறம் எதுக்குங்க 3 மாசம் அவகாசம்... நேரப் போயி கொடுக்க வேண்டிதான ஆயவறிக்கைய. அத விட்டுட்டு இப்படி பந்த், இல்ல இல்ல இது ஹர்த்தால், இல்ல இல்ல இது உண்ணாவிரதம் அப்படின்னு காமெடி பண்ணிகிட்டு. அட என்னமோ போங்க. எதுக்கெடுத்தாலும் சாதி, இனம்னு குத்தம் சொல்லியே பழக்கமாயிடுச்சி. இனிமே எங்க திருந்தறது :-(

')) said...

///Thamizhan said...

இந்தப் போராட்டம் கூட்டணி ஆட்சியின் உள்ளேயும்,கூட்டணியில் இல்லாத மற்ற சூழ்ச்சிக் காரர்கள் (எங்கெங்கே இருக்கிறார்கள் என்பது நாடறிந்ததே)அனைவர்க்கும் சேர்த்து,அனைத்துத் தமிழின உண்மைத் தலைவர்களால் ஆராய்ந்து எடுக்கப் பட்ட முடிவு என்பதுதான் என் கருத்து.///

உங்கள் கருத்தை மதிக்கிறேன்..இதே மாதிரி கருத்தை போராட்டத் தலைவர் சொல்லலை...கூட்டணி பத்தி ஒண்ணும் சொல்லலை.

//இந்த சூழ்ச்சியாளர்கள் மாற்றி, மாற்றிப் பாடும் பாட்டுக்களும்,செய்யும் சூழ்ச்சிகளும் உங்களைப் போன்ற அறிவாளிகளுக்குக் கட்டாயம் தெரியும்.///

அறிவாளி அப்படீன்னு நக்கல் தொனி...பரவாயில்லை...மன்னித்தோம்

//அதற்கு ஒத்தூதுபவர்கள் யார் என்பதும் பெரிய ஆராய்ய்ச்சி செய்ய வேண்டிய செய்தியல்ல.//

இந்த மாதிரி சுற்றி வளைக்கும் அடுத்தவர் ஊகத்தில் குளிர் காயும் தலைவர் பாணி வேண்டாம்? யார் என்ற கேள்விக்கு இவர் என்ற பதில்.

///மணல் திட்டுக்களை வைத்துத் தமிழக மக்களை இன்னும் மடையர்களாக ஆக்க முயல்வோர் மரியாதயுடன் ஒதுங்கிவிட்டால் பிரச்சினையே இல்லை.இதை வைத்து ஆட்சியைக் கவிழ்க்கவும்,அவர்கள் ஆட்சியைப் பிடிக்கவும் அலைவதுதான் பிரச்சினைக்கே காரணம் என்பது தமிழக மக்களின் கருத்து என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டியவர்கள் தெரிந்து நடந்தால் நல்லது,அனைவர்க்கும்.///

திட்டு திட்டு என்று சொல்லி கடைசியில் ராமனைத் திட்டியதால் வந்த வினை இது என்பது என் எண்ணம்.

')) said...

நெத்தியடித் தீர்ப்புக்கு தமிழர்கள் தந்த செருப்படி!
http://princenrsama.blogspot.com/2007/10/blog-post.html

//நெருப்புடன் விளையாடாதீர்கள்-உச்ச நீதி மன்றம் நெத்தியடி//
ஊதி அணைக்கு அளவு சிறு நெருப்பாக இருந்தாலும் சரி...
ஹெலிகாப்டரில் இருந்து மருந்து தூவ வேண்டிய பெரு நெருப்பாக இருந்தாலும் சரி... அணைக்கப்படும்

எதிரிகலையும் துரோகிகளையும் தூக்கி எறிவோம். தமிழர்களே! ஒன்றினையுங்கள்!

')) said...

பிரின்சு என் ஆர் சாமா

என் வலையை விளம்பரப் பலகையாக உபயோகப் படுத்துகிறீர்கள். பரவாயில்லை. கல்லாலடித்துக் கடையை மூட வைப்பதும், கொஞ்சம் தொழிளார்கள் ஐந்து விரலையும் விரித்து உதய சூரிய முத்திரை காட்டியபடி கட்சி விசுவாச போஸ் தருவதும் ஒட்டு மொத்த தமிழன் கருத்து என்று நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு சொன்னால் நானும் கேட்க வேண்டுமென்பது கட்டாயமில்லை.

நெருப்பை ஊதி அணைபீங்களோ அல்லது உருவாக்கி அணைப்பீங்களே அது உங்கள் இஷ்டம்..

உச்ச நீதி மன்றம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தான் சொல்லியிருக்கிறது. இப்ப ரிசீவிங்
என்ட்ல உங்க கட்சி இருக்குறதுனால உங்களுக்கு குடையுது..அதுக்கு ஒண்ணும் மபண்ண முடியாது.

')) said...

விளம்பரத்தை அனுமதித்ததற்கு நன்றி!
தமிழர்களின் உணர்ச்சி எப்படி இருந்தது என்பதற்குத் தான் எதிர்க்கட்சிகளும், உச்சநீதிமன்றமுமே சான்று தந்துவிட்டனவே!