Monday, October 01, 2007

ஆட்டம் தெரியாத நர்த்தகி கூடம் கோணல் என்றாளாம்

எதற்கு என்றே தெரியாமல் அவசர கோலத்தில் ஒரு பந்த்தை அறிவித்து விட்டு அதை உச்ச நீதி மன்றம் கேள்வி கேட்ட போது "பந்த்" இல்லை"ஹர்த்தால்" என்கிற கடையடைப்பு ..ஹி..ஹி ...அதுவும் இல்லை "பொதுக்கூட்டம்" என வாரி வழிந்தாகி விட்டது.

இப்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு இல்லை என்றவுடன் உச்ச நீதிமன்றத்தை தூற்றும் வேலை தொடங்கியாகி விட்டது.

உச்ச நீதி மன்றம் ஏதோ வானத்திலிருந்து பறித்து ஒரு தீர்ர்ப்பை வழங்கவில்லை.

கேரள உயர் நீதி மன்றம் முழு பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை1998 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்த உத்தரவை மீண்டும் உறுதி செய்து இந்த"பந்தை" தடை செய்திருக்கிறது. இந்தத் தடை ( அதாவது ஏற்கனவே 1998 ல் உறுதி செய்யப் பட்ட தீர்ப்பை) மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனில் உச்ச நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்தான் முடிவு செய்ய வேண்டும் என "தெளிவாகவே" எடுத்துச் சொல்லியுள்ளது. புத்தியுள்ளவர்களுக்கு புரியும்.
இதையெல்லாம் மறைக்கும் முகமாக ஏதோ தமிழ் நாட்டுக்கு எதிராக "வடக்கே உள்ள" உச்ச நீதிமன்றம் சதி செய்வது போல ஓலமிடுவது கேலிக்கூத்துதான்.


முதலில் உச்ச நீதி மன்றம் எந்த தீர்ப்பும் வழங்கவில்லை.ஏற்கனவே வேறு மாநிலத்தில்(கவனிக்க வேறு மாநிலத்தில்) நடந்த வழக்கு சம்பந்தமாக 1998-ல் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பை மாற்றமுடியாது என்று குறிப்பிட்டுள்ளது

இரண்டாவது இப்படியெல்லாம் உச்ச நீதி மன்றத்தை குறை கூறிக் கொண்டு திரியும் இவர்களும் தங்களால் கையாலாகாத போது ( காவிரி நீர் பிரச்சினை, முல்லை பெரியார் ) கை காட்டும் இடம் " உச்ச நீதி மன்றம்". அப்போது மட்டும் நீதி கிடைக்க உச்ச நீதி மன்றத்தை நாட இருக்கிறோம் என்று வெத்து அறிக்கையும் கைகேயி கண்ணீரும் உகுத்துக் கொண்டே இதே மனு நிதி சோழனின் கோட்டை வாசலில்தான் சென்று மாடு மாதிரி மணியாட்டுகிறார்கள்.

8 comments:

')) said...

"நீதி" அப்படீன்ன நான் நெனைக்கிறதை நீ உறுதிப் படுத்துறது அப்படீன்னு அர்த்தம் இல்லை.

Anonymous said...

திண்டுக்கல் சர்தார் அவர்களே பதிவு சூப்பர்!

')) said...

அனானிமஸு

அட்ரஸ் மாறி வந்து இருக்கீங்க

Anonymous said...

//அட்ரஸ் மாறி வந்து இருக்கீங்க//

கரெக்டா ஜெயா டிவி அட்ரசுக்கு தான் வந்திருக்கோம் சவடமுத்து

')) said...

இங்கன உண்மைதமிழன்னு ஒருத்தர் ரத்தின சுருக்கமா(!) எழுதீட்டு இருந்தாரே அவருக்கு நீங்க என்ன வேணும்?

Anonymous said...

மற்றபடி, எதிர்கட்சியே பந்த் வெற்றி... பஸ் ஒடவில்லை என்று எழுத்துபூர்வமாக தெரிவித்த முதல் பந்த் இது வாகத்தான் இருக்கும்

')) said...

அனானிமஸு

ஆளும் கட்சி பிரகாரம் -இன்று பந்த் இல்லை, உண்ணா நிலைப் போராட்டம்
(விரதம் - நோன்பு-- நிலை)

எதிர் கட்சி பிரகாரம் - " பந்த்" இல்லைனு சொல்லிக்கிட்டு " பந்த் " பண்றாங்க

அவங்கவங்க பங்குக்கு லாயலா நிக்கிறாங்க.

Anonymous said...

உண்மையை எடுத்து கூறியுள்ளீர்கள், ஆனால் திராவிட மாயை யில் இருக்கும் நமது தோழர்கள் மனு நீதிமன்றம் அப்படி-இப்படின்னு திசைமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..

என்னமோ கருணாநிதிதான் இவங்க வீட்டுல அடுப்பெறிக்க காரணம்ங்கற மாதிரியான ஒரு லாயல்டி......