Monday, October 01, 2007

பந்த் பற்றி காங்கிரஸ் கட்சியின் கண்ணோட்டம்

அறிவிக்கப் பட்டிருந்த அவசர கோல "பந்த்" மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கலந்து கொண்டாலும் பந்த் பற்றி அவர்கள் கண்ணோட்டத்தைப் பாருங்கள்


காங்., செய்தி ஊடகத்துறை தலைவர் வீரப்ப மொய்லி, "இது போன்ற போராட்டங்கள் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் நடத்தப்படக் கூடாது. சர்ச்சைக்குரிய தீர்மானம் தொடர்பாக உண்மையான தீர்வு காண்பதற்கு பொறுமை காப்பதே நல்லது. இதுபோன்ற, "பந்த்'கள் வன்முறைக்கு திரும்புவதோடு, வாழ்க்கையின் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அக்டோபர் இரண்டாம் தேதி "சர்வதேச வன்முறை எதிர்ப்பு தின'மாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்துக்கட்சிகளும் இந்த நோக்கத்துடன் இந்த தினத்தை கடைப்பிடிப்பது தான் விரும்பத்தக்கது' என்று கூறியுள்ளார்

என்னதான் கவனத்தை ஈர்க்க அது இது என்று சொன்னாலும் "பந்த்" "எதிர்ப்பு" போன்ற விஷயங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிரானதுதான்..இப்போது நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் அதனால் இது தேவையில்லாதது என்று சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் காங்கிரஸ் மென்று முழுங்குவதைத்தான் இது காட்டுகிறது.

10 comments:

')) said...

இன்னும் அடங்கலையா நீங்க...

ஒண்ணாந்தேதியே ஒரே பிரச்சினை பத்தி ஏழு பதிவு...ஏனிந்த கொலைவெறி.

உடம்பை பார்த்துக்கங்க...நாம இன்னும் நெறய எழுத வேண்டிருக்கு

(கவலையோட சொல்றேன்...மிரட்றேன்ன்ன்னு நினைச்சி மறுபடியும் டென்சவாதீங்க...ஹி..ஹி...)

')) said...

மாயாவி
////மாயாவி...! said...
இன்னும் அடங்கலையா நீங்க...

ஒண்ணாந்தேதியே ஒரே பிரச்சினை பத்தி ஏழு பதிவு...ஏனிந்த கொலைவெறி.

உடம்பை பார்த்துக்கங்க...நாம இன்னும் நெறய எழுத வேண்டிருக்கு

(கவலையோட சொல்றேன்...மிரட்றேன்ன்ன்னு நினைச்சி மறுபடியும் டென்சவாதீங்க...ஹி..ஹி...)/////

நீங்க இந்த கமண்ட்டை எழுதும் போது அடுத்த பதிவையும் போட்டாச்சு.

சொன்னா மாதிரி தாவு தீந்துதான் போவுது..நான் மின் மினிப் பூச்சி மாதிரி...ஒரு நாள் கூத்துதான் :)

உண்மையான நேயத்திற்கு நன்றி நண்பரே :)

')) said...

பாவம்.

ஆத்திரம் அறிவுக் கண்களை மறைக்கிறது.

எந்த விவாதத்திற்கும் இரண்டு எல்லைகள்,உண்மை ந்டுவில் எங்கேயோ!

')) said...

////Thamizhan said...
பாவம்.

ஆத்திரம் அறிவுக் கண்களை மறைக்கிறது.

எந்த விவாதத்திற்கும் இரண்டு எல்லைகள்,உண்மை ந்டுவில் எங்கேயோ!/////

கொஞ்சம் தெளிவு ப்ளீஸ். இதை எனக்கு சொல்றீங்களா இல்லை வீரப்ப மொய்லிக்கா ?

')) said...

கட்டாயம் உங்களுக்குத்தான்.தங்கள் பற்பலப் பதிவுகளுக்குந்தான்.

தங்களை அறிவாளி என்று சொன்னது தவறு.திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

')) said...

///Thamizhan said...

தங்களை அறிவாளி என்று சொன்னது தவறு.திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.////

சரி..தாங்களே அளித்து பின் திரும்பப் பெற்ற பட்டத்தை துறந்தேன்.

')) said...

கடைசியாக வந்த அனானிமஸ் பின்னூட்டம் தமிழன் என்ற பதிவர் மீது கொஞ்சம் கட்டம் கட்டியதால் பிரசுரிக்கவில்லை

')) said...

அநாமதேய அர்ச்சகர்களை ம்ட்டுறுத்துவதற்கு நன்றி.
துணிவுடனும்,நேர்மையுடனும் பதிவிட்டால் வெளியிட வேண்டுவ்வது தங்கள் உரிமை.

எழுதும் போதே அதற்கு வரும் எதிர்ப்புக்களை எதிர்பார்த்துத் தான் எழுத வேண்டும்.கிண்டல் இருக்கலாம்,கருத்து முக்கியம்.

Anonymous said...

வேலன் அய்யா,

ஆனால் ப்ரிய ரஞ்சன் தாஸ் அய்யா மஞ்ச துண்டை மாகாத்மா காந்தி மாதிரி என்று சொன்னது காமெடியின் உச்சமா,கேவலத்தின் உச்சமா?தீர்மானிக்கிறது கடினமா இருக்கே.

Anonymous said...

நீங்க என்னதான் எழுதினாலும் திராவிட நோய் தாக்கியவர்கள்
கிறுக்குத்தனமாகத்தான் ஆர்க்யூ
பண்ணுவாங்க....ஏன்னா ரவுடியிசமும்
கிறுக்குத்தனமும் அங்க ரத்தத்தில் ஊறியிருக்கு...