Monday, October 01, 2007

ஏன் ஆட்சியை கலைக்கக் கூடாது?

"பந்த்" கூடாது என்ற தடையுத்தரவை மதிக்காமல் நடந்து கொள்ளும் முதலமைச்சர் மீதும் தலைமைச் செயலர் மீதும் நீதி மன்ற அவமதிப்பு வழக்கை ஏன் முன்னெடுக்கக் கூடாது என உச்ச நீதி மன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும் கோர்ட் உத்தரவை அமல் படுத்த முடியாத தமிழக அரசை ஏன் டிஸ்மிஸ் செய்யக் கூடாது ? கலைத்து விட்டு ஏன் கவர்னர் ஆட்சியை அமல் படுத்தக் கூடாது என மத்திய அரசை கேட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி உன்ணாவிரதப் பந்தலை விட்டு விட்டு அலுவல்களை கவனிக்க கோட்டைக்கு புறப்பட்டு சென்றார் .அமைச்சர்களும் அவரைத் தொடர்ந்து கோட்டைக்கு சென்று விட்டனர் எனத் தெரிகிறது. (இப்படிப்பட்ட சில்லறை காரணங்களுக்காக தேர்தலில் வென்று பிடித்த ஆட்சியை பணயம் வைப்பது மதியீனம்தான்.)


இதனிடையில் தலைமை செயலர் திரிபாதி பஸ் போன்ற பொதுமக்கள் போக்குவரத்து சாதனங்களை உடனடியாக இயக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.அதைத் தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து பஸ் போக்குவரத்தும் அதிகரித்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


நாளை உண்ணாவிரதம் / பந்த் .. வெற்றி /தோல்வி, பிசுபிசுத்தது / மகத்தான ஆதரவு என எதிரெதிர் அணிகளின் அறிக்கைப் போர் ஆரம்பமாகி விடும். பத்திரிக்கைகாரர்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான்..பொதுமக்களுக்கு ?????

8 comments:

')) said...

ஆட்சி கலைப்பு என்கிற பூச்சாண்டிக்கெல்லாம் அசந்து போகிறவர் இல்லை கலைஞர். அப்படியே ஆட்சியை கலைத்தாலும் அடுத்த தேர்தலில் தி.மு.க இன்னமும் அதிக பலத்தோடு ஆட்சியை கைப்பற்றும் என்பதை உணராத அசடும் இல்லை ஜெயலலிதா....

மக்களின் வரிப்பணம் வீனாகிறது என கவலைப் படுங்கள் நானும் சேர்ந்து கொள்கிறேன்...மற்றபடி இந்த பிரச்சினை குறித்து ஒருதலையாய் மாய்ந்து மாய்ந்து எழுதும் உங்களைப் பார்த்தால் எனக்கு பாவமாய்த்தான் தெரிகிறது.

சப்ஜெக்ட்ட மாத்துங்க சரவனன்....

')) said...

உச்ச நீதிமன்றம் வேண்டுமானால் மத்திய அரசிற்கு தி.மு.க அரசினை கலைக்க உத்தரவிட முடியும்...ஆனால் முடிவெடுக்க வேண்டியவர் குடியரசுத் தலைவர்...தற்போதைய அரசியல் கூட்டனியால் அது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்...கலைப்பு சாத்தியமில்லாத பட்சத்தில் உச்ச நீதிமன்றம் தன் முகத்தில் கரியை தானே அப்பிக்கொள்ளும்.

இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா...அல்லது தெரியாதது மாதிரி எழுதுகிறீர்களா....

')) said...

மாயாவி...! said...

////ஆட்சி கலைப்பு என்கிற பூச்சாண்டிக்கெல்லாம் அசந்து போகிறவர் இல்லை கலைஞர். ////

நான் அப்படி நினைக்கவில்லை.

///அப்படியே ஆட்சியை கலைத்தாலும் அடுத்த தேர்தலில் தி.மு.க இன்னமும் அதிக பலத்தோடு ஆட்சியை கைப்பற்றும்////

இதுவும் உங்களது அனுமானம்தான்.. your wishful thinking என்றும் சொல்லலாம்

//மக்களின் வரிப்பணம் வீனாகிறது என கவலைப் படுங்கள் நானும் சேர்ந்து கொள்கிறேன்...///

நன்றி

///மற்றபடி இந்த பிரச்சினை குறித்து ஒருதலையாய் மாய்ந்து மாய்ந்து எழுதும் உங்களைப் பார்த்தால் எனக்கு பாவமாய்த்தான் தெரிகிறது.
///

உங்களது அரசியல் நிலைபாடு உங்களை அப்படி எண்ண வைக்கிறது. காமாலை எனக்கா இல்லை உங்களுக்கா அல்லது இருவருக்குமா???

///சப்ஜெக்ட்ட மாத்துங்க சரவனன்....///

நாயகன் பட வசனம் "அவனை நிறுத்தச் சொல் ..நான் நிறுத்துகிறேன்.

பி.கு: நான் சரவணகுமார்

Anonymous said...

மக்களின் வரிப்பணம் வீனாகிறது என கவலைப் படுங்கள் நானும் சேர்ந்து கொள்கிறேன்...

')) said...

////
மாயாவி...! said...
உச்ச நீதிமன்றம் வேண்டுமானால் மத்திய அரசிற்கு தி.மு.க அரசினை கலைக்க உத்தரவிட முடியும்...ஆனால் முடிவெடுக்க வேண்டியவர் குடியரசுத் தலைவர்...தற்போதைய அரசியல் கூட்டனியால் அது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்...கலைப்பு சாத்தியமில்லாத பட்சத்தில் உச்ச நீதிமன்றம் தன் முகத்தில் கரியை தானே அப்பிக்கொள்ளும்.

இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா...அல்லது தெரியாதது மாதிரி எழுதுகிறீர்களா....////

இந்த (அல்லது எந்த )ஆட்சி (யும்)கலைக்கப் படாதது அல்லது படுவது பற்றி எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.

உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டதும் கோட்டைக்கு அவசர அவசரமாக நானா போகச் சொன்னேன் அல்லது உண்ணாவிரதம் பற்றி நீதிமன்றம் ஒன்றும் சொல்லவில்லை அதனால் அது அவமதிப்பாகாது என்று பேட்டி குடுக்கச் சொன்னேன்?!!!ஆட்சியை தக்க வைக்கும் பயம் / பதவி ஆசை அரசியலில் அனைவருக்கும் உண்டு.

நான் இங்கு சொல்ல வருவது திட்டமிடாமல் சொந்த விறுப்பு வெறுப்புகளுக்காக ஏதாவது அறிவிக்க வேண்டியது...பிறகு அதை ஞாயப் படுத்த ஆயிரம் கூத்து- இதப் பற்றித்தான்...இதோ இப்போது அனைவரும் சே ச கா தி யை காற்றில் விட்டு விட்டு உண்ணா விரதப் பந்தலிலேயே நீதி மன்றங்களின் யதோச்சதிகாரம் பற்றி அறை கூவ ஆரம்பித்தாயிற்று!!!!!!!!

')) said...

மீண்டும் சொல்கிறேன்...உங்களது பார்வையும் கோணமும் ஒருதலையானது....

உங்களின் கருத்துக்களில் உடன்பாடில்லாவிட்டாலும்,...பாசாங்கில்லாது நேர்மையாய் விவாதிக்க முன் வரும் உங்களின் நிதானத்திற்கு வாழ்த்துக்கள்.

')) said...

///உங்களின் கருத்துக்களில் உடன்பாடில்லாவிட்டாலும்,...பாசாங்கில்லாது நேர்மையாய் விவாதிக்க முன் வரும் உங்களின் நிதானத்திற்கு வாழ்த்துக்கள்.///

நன்றி மாயாவி-Though you are flattering me.

நான் தி மு க நிலையின் எதிர்ப்பு நிலை பதிவு ( இந்த சந்தர்ப்பம் அப்படி அமைந்து விட்டபடியால்) பலவும் போட்டு விட்டபடியால் ஒரு வேளை எனது பார்வையும் கோணமும் ஒரு தலையானது போல தோன்றுவது தவிர்க்க முடியாததகிறது. ராமனை நிந்திக்கக் கூடாது என்பதால் நான் ராமன்தான் பாலம் கட்டினான் என்று சொல்கிறேனில்லை.
பாலத்தை இடிக்கலாகாது என்பதால் அது புனித சேது என்று சொல்கிறேனில்லை.

சொல்ல வருவது எப்படி ப ஜ, அ இ அ தி மு க தராசின் ஒரு தட்டில் என்றால் தி மு க இன்னொரு தட்டில்-மற்ற கட்சிகள் கையைப் பிசைந்து கொண்டு இவர்களது கைப் பாவைகளாய் .

அது சரி- நடு நிலைமை என்று ஒன்று உண்டா என்ன?

Anonymous said...

//உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டதும் கோட்டைக்கு அவசர அவசரமாக நானா போகச் சொன்னேன் அல்லது உண்ணாவிரதம் பற்றி நீதிமன்றம் ஒன்றும் சொல்லவில்லை அதனால் அது அவமதிப்பாகாது என்று பேட்டி குடுக்கச் சொன்னேன்?!!!ஆட்சியை தக்க வைக்கும் பயம் / பதவி ஆசை அரசியலில் அனைவருக்கும் உண்டு.

நான் இங்கு சொல்ல வருவது திட்டமிடாமல் சொந்த விறுப்பு வெறுப்புகளுக்காக ஏதாவது அறிவிக்க வேண்டியது...பிறகு அதை ஞாயப் படுத்த ஆயிரம் கூத்து- இதப் பற்றித்தான்...இதோ இப்போது அனைவரும் சே ச கா தி யை காற்றில் விட்டு விட்டு உண்ணா விரதப் பந்தலிலேயே நீதி மன்றங்களின் யதோச்சதிகாரம் பற்றி அறை கூவ ஆரம்பித்தாயிற்று//

அருமையான அவதானம், நான் நினைத்தேன் நீங்க எழுதியிருக்கீங்க.