Monday, October 01, 2007

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்...வானம் ஏறி

அமைச்சர் டி ஆர் பாலு தலைமையிலான மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்கப் படாமல் காலதாமதம் ஆகின்றன.

இதனால் செலவுத் தொகையும் கடுமையாக அதிகரித்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஒவ்வொரு துறையாலும் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்வது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் பணி.இது கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிந்த கால கட்டத்துக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அதில் கிடைத்த தகவல்கள்

கிழக்கு,மேற்கு& வடக்கு ,தெற்கு இணைப்பு நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணியும்,துறை முகங்களை இணைக்கும் சாலைகள் அமைக்கும் பணியும் ஆமை வேகத்தி நகர்கிறது. ,இந்தத் திட்டத்திற்காக ஏற்படுத்தப் பட்ட காலக் கெடு முடிந்த பின்னும் பணிகளின் தாமதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை


ஆந்திராவில் நெடுஞ்சாலை எண் 7 ல் 2003 ஆம் வருடமே ஒப்புதல் வழங்கப்பட்ட அட்லூரு-கால்காலு இடையேயான சாலை 0.5% மட்டுமே பூர்த்தியாகியுள்ளது( திட்ட மதிப்பு ரூ 546.15 கோடி)


இது தவிர மஹாராஷ்ட்டிராவில் ஜாம்வத்னார்-தேவ்ஹரி-கோலாபூர் நெடுஞ்சாலை, தமிழ் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எண்7-ல் மதுரை- கன்னியாகுமரி நெடுஞ்சாலைத்திட்டம், நாக்பூர்-ஹைதராபாத் ,பதான்கோட்-போக்பூர் ஆகிய திட்டங்களும் மெத்தனமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கு-கிழக்கு இணைப்பு திட்டம்-2 ன் கீழ் மேற்கொள்ளப் பட்டு வரும் 40 நெடுஞ்சாலைத் திட்டங்களுமே காலக் கெடுவைத்தாண்டியும் முடியப் போவதில்லை என்ற நிலைதான் காணப் படுகிறது.

கிழக்கு-மேற்க்கு இணைப்பு திட்டம்-2 ல் செயல்படும் 66 நெடுஞ்சாலைத் திட்டங்களும் இதே கதியில்தான்.


தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டு வரும் சாலைப் பணிகளும் 3 ஆண்டுகள் கால தாமதமாகவே நடந்து வருகின்றன.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


வனப் பகுதியில் சாலை அமைப்பதில் அனுமதி பெறுவதில் சிக்கல், நிலம் கையகப் படுத்துவதில் சிக்கல், சில மானிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் போன்றவற்றால் இந்தத் திட்டங்கள் தாமதமாகின்றன என்று கூறப்படுவதில் உண்மை இருப்பதை நாம் புரிந்து கொள்ளும் அதே நேரத்தில் நாமக்கு தோன்றும் ஒரு சந்தேகம் - இப்படி ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டு நிலுவையில் இருக்கும் பல 1000 கோடி மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்த தீவிரமும் காட்டாமல் புதிதாக சேது சமுத்திரத் திட்டத்திற்காய் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதன் பின்னணி மக்கள் நலம் மட்டும் தான?


இதைப் பார்த்ததும் நமக்கு நினைவில் வந்த பழமொழி

"கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்பட்டானாம்".

3 comments:

')) said...

ஆம்!
தாமதங்கள் ஆகும் காரணங்களில் பெருங்காரணம் நீதி மன்றத் "தடுப்பு"(stay)ஆணைகள் தான்.பொது நல்த்திற்காக நமது சொத்து வழியில் இருந்தால் அதை விட்டுத் தர நம்மில் எத்தனை பேருக்கு மனது வருகிறது.

இந்தியாவில் இன்று மிகவும் மலிவாகக் கிடைப்பது ஸ்டே ஆர்டர் தான்.எதற்கு வேண்டுமானாலும் உடனே கிடைத்து விடும்.சாலை போட வேண்டிய இடத்திலிருந்து,கொலை வழ்க்கை ஆண்டுக் கணக்காக இழுத்தடிக்கும் வரை இந்தாருங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கீழ் நீதி மன்றத்திலிருந்து உச்ச நீதி மன்றம் வரை நீதிபதிகள் மூக்கை நுழைக்காத காரியமே கிடையாது.

குறை சொல்லுங்கள்,நடுவாக இருந்து எல்லோரையும் திருந்தச் சொல்லுங்கள்.இல்லாவிட்டால் உங்கள் சாயந்தான் வெளுக்கும்.

Anonymous said...

உன் வீட்டு மேல ரோடு போட்டான்னா தெரியும்....அடுத்தவன் வூட்ட இடிச்ச உனக்கு என்ன? குறைந்த பட்சம் மார்க்கெட் கூட தர மாட்டானுக... கவர்மென்ட் குடுக்கற காசை வைத்து குடிசைதான் போட முடியும்.நாங்க என்ன டிஆர் பாலுவா, வீட்ட இடிச்ச இடிக்கட்டும், சேதுபால கமிஷனை வைச்சி நல்ல வீடா கட்டிக்கலான்னு விட?

Anonymous said...

காண்டிராக்டர்கள் சரியா கமிஷன் குடுக்கல்லையோ என்னமோ?...