Saturday, November 01, 2008

(மனசாட்சியுள்ள)தொண்டனின் மனநிலை

"உன் பேனா தலை குனிந்தால்,
தமிழகம் தலை நிமிர்கிறது "

ஒரு சமயம் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழக முதல்வர் கருணாநிதியைப் பார்த்து இப்படிக் கவிதை வடித்தார்.

இப்படியெல்லாம் வருணிக்கப் பட்ட தி மு க தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான கருணாநிதியின் இன்றைய காலகட்டத்தின் செயல்பாடுகள் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே அதிருப்தியையும், கழிவிரக்கத்தையும் தோற்றுவித்துவிட்டது என்றால் அது மிகையில்லை.

குறிப்பாக கருணாநிதியின் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த சமீபத்திய அறிக்கை,நிலைபாடுகள் மற்றும் செயல்பாடுகள் அவரது தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட இந்தப் பதிவரது இந்தப்பதிவின் மூலமாக இப்படி வெளிப்பட்டுள்ளதெனில் மற்றவர் பற்றி சொல்லவும் வேண்டுமோ ?

முதல்வராவது திருந்தவேண்டும் அல்லது அவரது கண் மூடித்தனமான ஆதரவாளர்களாவது வெகு சீக்கிரத்தில் உண்மை நிலை உணர வேண்டும்!!!! என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?

6 comments:

')) said...

இனி மேல் அப்துல் ரகுமான் "நீ பேசினாலே தமிழகம் தலை குனிகிறது " என்று கவிதை படிப்பாரோ

Anonymous said...

//இனி மேல் அப்துல் ரகுமான் "நீ பேசினாலே தமிழகம் தலை குனிகிறது " என்று கவிதை படிப்பாரோ//

”நீ படுத்தால் உன் தம்பி நிமிர்கிறான்” னு கவிதை பாடியிருப்பார். (அட தம்பினா உடன்பிறப்புபா)

')) said...

"இனி மேல் அப்துல் ரகுமான் "நீ பேசினாலே தமிழகம் தலை குனிகிறது " என்று கவிதை படிப்பாரோ"

ரீப்ப்பீட்டே,......

')) said...

இனி மேல் அப்துல் ரகுமான் "நீ பேசினாலே தமிழகம் தலை குனிகிறது " என்று கவிதை படிப்பாரோ

TRUE ENOUGH.

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி :)

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுடர்மணி(கொஞ்சம் நல்லவன்)-அதென்னங்க கொஞ்சம் நல்லவன் :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீ