Friday, February 06, 2009

எப்பத்தான் நிறுத்துவீங்க ?

இன்னைக்கு உடன்பிறப்புக்கு விட்டிருக்கும் கடித அறிக்கைல "நமது வேண்டுகோளின் படி இந்திய மத்திய அரசு, எடுத்த முயற்சிகளால் ஐ.நா. மன்றம் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ கூட்டமைப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள்" அப்படின்னு சொருகி விட்டு அடிச்சு ஆடியிருக்காரு தமிழினத் தலைவர்.

இந்தியாவே இன்னும் இலங்கை கிட்ட போர் நிறுத்தம் செய் அப்படீன்னு சொல்லலை. இந்த லட்சணத்துல இவங்க விட்ட வேண்டுகோளுக்கிணங்க இந்திய அரசு முயற்சி எடுத்து அமெரிக்கா,பிரிட்டன்,டோகியோ எல்லாம் அறிக்கை விட்டிடுச்சாம்.

கேக்குறவன் கேணைனா என்ன வேணா சொல்லலாம் போல? இதெல்லாம் எப்பத்தான் நிப்பாட்டுவாங்களோ

1 comments:

Anonymous said...

கருநாக நிதியின் இன்றைய அறிக்கை யும் நமது பார்வையும்...

//ஆளுங்கட்சி என்ற முறையில் தி.மு.க. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும், தமிழக அரசின் தலைமை செயலகத்தில் கூட்டி அந்த கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைத் துறந்திட தி.மு.க. தவிர வேறு கட்சிகள் முன்வராத நிலையில் அந்த தீர்மானம் கிடப்பிலே போடப்பட்டது.//
ஆமாம் தாங்கள் பதவி விலகி இருந்த்தால் பதவி ஆசை உள்ள கட்சிகள் எவை என தமிழக மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கலாம் அல்லவா?ஏன் செய்யவில்லை..


//அடுத்து அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டு நடைபெற்ற "மனிதச் சங்கிலி'' நிகழ்ச்சியை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சியான ம.தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும் புறக்கணித்தே விட்டன//
எப்படி தலைவா காங்கிரஸ் கம்முனாட்டிகள் பத்தி நாசூக்கா தவிர்கிறீர்கள்?

//நமது வேண்டுகோளின் படி இந்திய மத்திய அரசு, எடுத்த முயற்சிகளால் ஐ.நா. மன்றம் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ கூட்டமைப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் என அந்த அறிவிப்புகளை//
தூத்தேறி இதுதான் அடுத்தவன் பெத்ததை எனக்கு பிறந்தது என்று சொல்வதா?ஈழ தமிழர்கள் அவனவன் கடும் குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல் ஐ.நா சபை முன்பும் பிற நாடுகளின் தூதரங்கள் முன்பும் போராடியதால் வந்தது.. இவ்வாறான அறிவிப்புகள்

//அதே நேரத்தில் போற்றத்தக்க அளவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் அறிவிப்புகளும் வெளிவந்துள்ளன.//

சோனியா புடவைக்குள் பா.சி ஒளிந்திருந்தாலும் ஒரு தமிழராக கிஞ்சித்தேனும் உணர்வு வந்து சொல்லிருப்பார்.. ஆனால் சிறிது நேரத்திலே பேட்டி அளிக்கும் குள்ள புஷ்கான் பிராணாப்பு உயிர்பலி இல்லாமல் சண்டை போட வேண்டுமாம்! அப்பவும் அவன் போரை நிறுத்த சொல்லவில்லை? இதற்கு உமது வக்காலத்து வேறு?

//இந்திய மத்திய அரசும் வேடிக்கை பார்க்கவில்லை என்ற நிலை உணர்ந்து விரைவில் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும், இந்தப் பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை//
வேடிக்கை தான் நாங்கள் பார்த்தோமே! தாம்பரத்தில் இருந்த்து சிங்கள ராணுவத்தை பெங்களூர் சென்று தமிழரை கொல்ல பயிற்சி பெற்றதை! ஆமாம் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை ...அதாவது வழக்கம் போல கேனை தமிழர்களா... மறுபடியும் காங்கிரசுக்கு வாக்களிக்க சொல்லுகிறீர்கள்!இதெல்லாம் ஒரு பொழப்பு ..உங்கள் அன்னை சோனியா பாதுகாப்பாக சென்னைக்கு பிரசாரத்திற்கு வருவாரா? தமிழக மக்கள் கொதித்து போய் உள்ளார்கள் .. தூத்தேறி..