Friday, December 28, 2007

"மணக்கும் நட்சத்திரம்"

தமிழ் மணம் நட்சத்திரப் பதிவர் என்று ஒருவரை தேர்ந்தெடுத்து ஒரு வாரம் அவரது பதிவுகளை தமிழ்மண முகப்பில் வைத்து பெருமைப் ?! படுத்துகிறது

அந்தப் பதிவரின் நட்சத்திர முதல் பதிவில் வாழ்த்துக்கள், நட்சத்திர வாழ்த்துக்கள் போன்ற பின்னூட்டங்கள் வந்து அது ஒரு அங்கிகாரக்தான் போலும் என்ற நினைப்பை வரவழைக்கிறது.அந்த அங்கீகாரம் ஓரளவு உண்மையும் கூட



நானும் பல நாட்களாக நல்ல தேர்ந்த சீனியர் பதிவர்கள் , பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதுபவர்களை தேர்ந்தெடுத்து போடுவார்கள் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.



ஆனால் இந்த வாரம் தமிழ்மண நட்சத்திரத்தின் வலைப் பூவில் முகப்பில் காணக் கிடைக்கும் செய்தி


"இப்பதிவுகள் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தரும் முயற்சி."




அதாவது குற்றச் சாட்டுக்கள் உண்மையாய் இருந்தாலும் கூட சார்பு நிலையுடைய இவர் அதற்கும் விளக்கம் தர ( ஒத்துக் கொள்ள மாட்டார்...சப்பைக் கட்டு கட்டுவார் போல) முயலும் ஒரு வலைத்தளம்தான் என அக் மார்க் முத்திரை குத்திக் கொண்டதுதான் இந்த வார நட்சத்திரத்தின் வலைப்பூ.



சார்பு நிலையுள்ளவர்கள் நட்சத்திரப் பதிவராகக் கூடாதா என்றால் தாராளமாக ஆகலாம்..

முன்னாலும் லக்கி லுக் போன்ற திமுக கட்சி சார்புடைய பதிவர்கள் நட்சத்திரங்களாக்கப் பட்டிருக்கிறார்கள்...பார்ப்பனீயத்தை ஆதரிப்பதாக கட்டம் கட்டப்பட்ட டோண்டு ராகவனும் , அசுரன் போன்ற இடது சாரி சிந்தனையுள்ளவர்களும் நட்சத்திரப் பதிவர்களாகியிருக்கிறார்கள்..அது அவர்களது சார்பு நிலை ..ஆனால் அந்த வலைப் பக்கங்களில் கொஞ்சமேனும் வெரைட்டியும் படிப்பவர்களுக்கு ஆர்வமேற்படுத்தும் விஷயங்களும் இருக்கும்..(அட்லீஸ்ட் அந்த நட்சத்திர வாரத்திலேயாவது) ஆனால் இந்த வார நசத்திரப் பதிவரின் பதிவுகள் அப்படியா? ஒரு வட்டத்தை விட்டு அவரது பதிவுகள் வெளியே சென்றதே இல்லை..பதியும் மூன்று வருடங்களாக !!!!! இப்படிப் பட்ட நட்சத்திரப் பதிவர்களாய் ஏற்படுத்தி என்ன சாதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை? இல்லை ஆள் பற்றாக் குறையா ?



நட்சத்திர பதிவர்களாக்குவது எங்களது இஷ்டம்..யாரை வேண்டுமானாலும் ஆக்கி படிக்கும் அனைவரையும் கொடுமைப்படுத்துவோம் என தமிழ் மணம் சொல்லலாம், சொன்னாலும் அது சரியே.



ஆனால்

நட்சத்திரப் பதிவு என்றால் ஒரு அலர்ஜியும் , அதே சமயத்தில்

"உங்களைப்போன்றவர்களை எல்லாம்... நட்சத்திரம் ஆக்கிய தமிழ்மணம் பேசாமல் சிரைக்க போகலாம்! "

போன்ற அவல பின்னூட்டங்களும் வருகிறதே ???

தெளிந்து தமிழ் மணமாவது அல்லது நட்சத்திரமாவது மாறினால் நல்லது :))

15 comments:

')) said...

வேலை வெட்டியில்லாமல் இதற்கு ஒரு பதிவு போட்ட எனக்கும் அந்த திட்டு பொருந்தும்தான் :)

')) said...

அட டா நான் போட்ட பின்னூட்டத்திற்கு இப்படி ஒரு எதிர் வினையா?

நீங்க என்னை திட்டலையே?

நீங்கள் நினைத்தைத்தான் நானும் நினைத்தேன், அவரே ஒரு முன் முடிவை அறிவித்துக்கொண்டுள்ளார், பின்னர் போகிற போக்கில் வரலாற்றையே திரித்தும் சொல்லிக்கொள்கிறார். அதற்கு அங்கு யாரும் மறுப்பே தெரிவிக்காமல் கதை ஓடுகிறது. பின்னர் அவரே சொல்லிக்கொள்ளக்கூடும் நான் சொன்னது உண்மை இல்லை எனில் யாராவது மறுத்து இருப்பார்களே என்று.

அவர் பதிவின் நோக்கம் தெரிந்து தான் யாரும் மறுப்பு சொல்லவில்லை என நினைக்கிறேன்.

நீங்கள் ஒரு பதிவுப்போட்டு கேட்பிங்க, ஆனால் சொல்ல விரும்பும் கருத்தை சம்பந்தப்பட்ட இடத்திலேயே போய் சொல்வது தான் எனது பாணி.நெத்தி அடி தான்! தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் அல்லவா?

Anonymous said...

its true man
this week thamizmanam star is writing lot of garbages in the name of islam.
the recent post is about tamilnadu separation.

hell only god can save tamil readers

')) said...

வவ்வால்

உங்களை திட்டவில்லை.

அவலம் என்று சொல்லியது "சிரைக்க" என்ற சொலவாடையை உபயோகித்ததற்கு மட்டுமே.இந்து போல் நாம் அன் இன் டென்சனலாக உபயோகிக்கும் வார்த்தைகள் சிலரை புண்படுத்தக் கூடும்:) இதையே நீங்கள் " பூனையை பிடித்து சிரைக்கலாம் " என்று எழுதியிருந்தால் ஒரு வெட்டிக் காரியத்தை குறிப்பதாக இருக்கும். இப்போது ஏதோ அந்த தொழிலை குறைத்து கூறுவதாக அர்த்தப் பட்டு விடும். இந்த சொல்லாடல்களைப் பற்றியும் ஒரு பதிவு போட வேண்டும் :)


///அவர் பதிவின் நோக்கம் தெரிந்து தான் யாரும் மறுப்பு சொல்லவில்லை என நினைக்கிறேன்.///

தமிழ்ப் பதிவுலகில் இந்தப் புரிதல் மிக மிக அவசியம் :)

///தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் அல்லவா?
////

எங்க போட்டாலும் படிக்க வேண்டியவங்க படிச்சுக்கிட்டுதான் இருப்பாங்க அப்படீன்னு நான் நெனைக்கிரேன். இப்ப நீங்களே இந்தப் பதிவை கப்புனு புடிக்கலையா? :)) Anyway முதல் வருகைக்கு நன்றி :)

ஒருங்கிணைக்கிறதுக்கும்...படையெடுத்துவந்து வன்முறையால் அடிமைப் படுத்தி கப்பம் வாங்கி அரசாள்ரதுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவங்களுக்கு பின்னூட்டத்தின் மூலம் விளக்க முற்பட்ட உங்களது தைரியம் பாராட்டத்தக்கது :)

')) said...

அனானிமஸ்

பொறுக்க முடியலை இல்லையா :)

')) said...

http://amkworld.blogspot.com/2007/10/blog-post.html
http://puduvaisaravanan.blogspot.com/

no wonder when I see a post like this one from you

Hope you have the guts to allow this comment

')) said...

வாங்க பெயரிலி

உங்க பின்னூட்டத்தைப் போட தைரியமெல்லாம் எதுக்கு..அப்படி என்ன புரட்சிகர பாம் வச்சுட்டீங்க நான் பயப்பட.

In fact உங்க பின்னூட்டம்தான் " செம டுபுக்கு " + காமடி

பார்க்க http://velanvelan.blogspot.com/2007/10/blog-post_5214.html

வந்து பின்னூட்ட எண்ணிக்கையை கூட்டுனதுக்கு நன்றி..போயி தனியா உக்காந்து யோசிங்க ...நாந்தான் அவரா அப்படீன்னு...சரியா

')) said...

thanks. It is amazing to see people like you have guts in time. I agree it is a surprise to me.

Anyway, even before you pointed the link out, I saw the link.... as a matter of fact it is backlinked to a.mu.ka post. You (dis)claim that you're not the other one :-) Does this statement prove anything?

I never read nalladiyar (or for the matter, anything I think with high dose of religious fanatism is not og my interest). However, he has all his right to post whatever he wants on whenever he wants. (For the same reason, I do not read saravaNan's blog nor uNmaiadiyan's blog:-))

Anyway, thanks for allowing my comment.

')) said...

BTW, what does " செம டுபுக்கு "mean?
I do not get it :-(

')) said...

பெயரிலி
/// It is amazing to see people like you have guts in time. I agree it is a surprise to me.///

I don't need a certificate from you என்று பதிலுரைக்க ஆசை.ஆனால் நீங்கள் சொல்லிய விதம் என்னை புண்படுத்தாததால் சொல்லவில்லை :)

///Anyway, even before you pointed the link out, I saw the link.... as a matter of fact it is backlinked to a.mu.ka post. You (dis)claim that you're not the other one :-) Does this statement prove anything?///

I am not (dis)claiming any thing.It is just an information. Because I don't want to keep people guessing wrongly and I keep laughing that i made fool out of them.So I tell them the truth. Still if they don't believe & choose to be the otherway ,I can do nothing about it.

///I never read nalladiyar (or for the matter, anything I think with high dose of religious fanatism is not og my interest). However, he has all his right to post whatever he wants on whenever he wants. (For the same reason, I do not read saravaNan's blog nor uNmaiadiyan's blog:-))///

நல்லடியாரோ மற்ற எவருமோ அவர்கள் விருப்பப் பட்டதை தாராளமாக எழுதலாம்..ப்ளாக் என்பதே அதற்காகத்தானே..

நீங்களே ""high dose of religious fanatism is not og my interest" என்று குறிப்பிட்ட படி ஒற்றைப் பார்வை உள்ளவர்களை அது மட்டுமே எழுதுபவர்களை தமிழ் மண நட்சத்திரமெல்லாம் ஆக்கினால் படிக்கும் என்னைப் போன்ற வாசகனுக்கு ஏற்படும் ஆயாசம் குறித்தே இந்தப் பதிவு.அதுவும் நான் தெளிவாக சொல்லிவிட்டேன்

"நட்சத்திர பதிவர்களாக்குவது எங்களது இஷ்டம்..யாரை வேண்டுமானாலும் ஆக்கி படிக்கும் அனைவரையும் கொடுமைப்படுத்துவோம் என தமிழ் மணம் சொல்லலாம், சொன்னாலும் அது சரியே" என்று.

இதைச் சொன்னால் சொன்ன கருத்து சரி தவறு என்று சொல்லாமல் நீ அவந்தான் நீ இவந்தான் என கட்டம் கட்டினால் 'செம டுபுக்கு " என சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

BTW -'செம டுபுக்கு' means argument is baseless & irrelevent to the context.:) No hard feelings :)

Thanks for coming again & sharing your personal thouguts on likes of NALLADIYAR , SARAVANAN & Unmaiyadiyan .

')) said...

நீங்கள்தான் அவர் என்று சொல்பவர்கள்தான் அதை நிரூபிக்க வேண்டும்.

மற்றப்படி அந்தக் கட்சிக்காரர்களுக்கு வெவ்வேறு பெயர்களில் எழுதுவதே வேலையாகிப் போயிற்று. தான் திருடி பிறரை நம்பாள் என்பது போல தங்களைப் போலவே மற்றவரையும் எண்ணுவதே அவர்கள் தொழில்.

வாதம் செய்ய இயலாது என்றால் திட்டுவார்கள் அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சரவணக்குமார்,

நட்சத்திரவாரப் பதிவுகளை வாசித்ததை விட முகப்பில் காணப்பட்ட "இப்பதிவுகள் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தரும் முயற்சி." என்ற டிஸ்க்ளைமரால் உங்களைப் போன்ற 'திறமை' மிக்க வாசகர்க விமர்சகர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் எழுதத் தவறியது துரதிஷ்டம்.

//அதாவது குற்றச் சாட்டுக்கள் உண்மையாய் இருந்தாலும் கூட சார்பு நிலையுடைய இவர் அதற்கும் விளக்கம் தர ( ஒத்துக் கொள்ள மாட்டார்...சப்பைக் கட்டு கட்டுவார் போல) முயலும் ஒரு வலைத்தளம்தான் என அக் மார்க் முத்திரை குத்திக் கொண்டதுதான் இந்த வார நட்சத்திரத்தின் வலைப்பூ.//

நீங்கள் என்ன குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள்? அதற்கு நான் எந்தவகையில் சப்பைக் கட்டினேன்? நீங்கள் வைத்த நியாயமான குற்றச்சாட்டுக்களில் எதை ஒத்துக் கொள்ளவில்லை என்று சுட்டினால் விமர்சனத்தில் நேர்மை இருக்கும்.

//ஆனால் அந்த வலைப் பக்கங்களில் கொஞ்சமேனும் வெரைட்டியும் படிப்பவர்களுக்கு ஆர்வமேற்படுத்தும் விஷயங்களும் இருக்கும்..//

எந்த மாதிரி வெரைட்டியாக எழுதினால் உங்களைப் போன்ற விமர்சகர்களுக்கும் அல்லது தமிழார்வலர்களுக்கும் ஆர்வம் ஏற்படும் என்று அறிந்து கொண்டு எழுதி இருக்க வேண்டும்; எப்படி வெரைட்டியாக எழுதி பின்னூட்டங்கள் பெற்று (என்று நம்புவோமாக) வலையுலக டெண்டுல்கர் என்று வாசகர்களால் (இதையும் நம்பித்தொலைப்போம்) பாராட்டுக்களைப் பெறுவது எப்படி என்று (சமீபத்தில்:) எங்கள் கல்லூரியில் படித்துச் சென்ற டோண்டு ராகவனிடம் கேட்டாவது எழுதித் தொலைத்திருக்கலாம்.

அப்புறம், என் பதிவில் அனானியாக வந்து 'சிரைத்தலைப்' பரிந்துரைத்தது சரவனக்குமார் அல்ல என்ற திருப்தியில் நட்சத்திரவாரத்தில் எழுதிய ஆனால் துரதிஷ்டவசமாக ஆர்வம் ஏற்படுத்தத் தவறிய சில வெரைட்டி என்று நான் நம்பும் சிலபதிவுகளை மட்டும் ஆங்காங்கு சுட்டிகளாக் இட்டுள்ளேன். மேலும் பழைய பதிவுகளில் சில வெரைட்டியானதையும் கீழிடுகிறேன். வாசித்து சப்பை கட்டாமல் பின்னூட்டாவிட்டாலும் தனிப்பதிவில் கருத்துச் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

பள்ளிகளில் பாலியல் கல்வி - ஒரு கண்ணோட்டம்!



ராமர் பெயரால் ஒரு தேசத்துரோகம்...



ஹிந்துஸ்தானத்தில் முஸ்லிம்களுக்கு 100% ஒதுக்கீடு...!!!

')) said...

நல்லடியார்

பதிவின் முகப்பில் இருப்பது "Disclaimer" இல்லை
" Blog Description"...அதாவது பொதுவாக இந்த வலைப் பூவில் என்ன காணக் கிடைக்கும் என்று சொல்வது. தெரியாமல் அந்ததைடத்தில் Disclaimer ஐ போட்டு விட்டிருந்தால் மாற்றி விட்டு உங்கள பதிவின் "Variety" யை காட்டும் Description ஐப் போட்டு விடவும். அப்படி போட்டால் இன்னும் சில பேர் பதிவுகளுக்குள் போகக் கூடும்.

நான் எந்த க்உர்ரச் சாட்டும் வைக்கவில்லை...அதை நீங்கள் ஏற்கவோ அல்லது மறுக்கவோ இல்லை..நான் உங்களது "Disclaimer" கற்பிக்கும் அர்த்தத்தை மட்டுமே குறிப்பிட்டேன்


மற்ற படி நீங்கள் சுட்டி குடுத்திருந்த எந்த பதிவிலும் பெயரிலி குறிப்பிட்டிருந்தது போல் "high dose of religious fanatism " தவிர வேறெதுவும் இல்லை.

SO I STILL REITERATE MY STATEMENT

')) said...

டோண்டு ராகவன்

No comments to your statement

Anonymous said...

நீங்கள் புதுவை சரவணனாக இருக்ககூடுமோ ? இல்லை இல்லை நீங்கள் முகமூடி தானே, இல்லை, சமுத்ரா தான் சரவணகுமாரா ? இல்லை இல்லை அவர் தான் இவர். இவர் தான் அவர்...


இதெல்லாம் தான் சில தில்லாலங்கடிகள் மூளையில் உதிக்கும். ஏனென்றால் அவர்கள் அறிவு அப்படித்தான் வேலை செய்து பழக்கப்பட்டுவிட்டது. திருடனுக்கு திருட்டுபுத்தி என்னிக்குமே போகாது.


தமிழ்மணம் நட்சத்திரம் சுத்த வேஸ்ட். அதுவும் இந்த வாரம் கேணத்தனமான ஒரு பதிவரைப் போட்டார்கள். அதற்குபதில் அந்த இடத்தில் 50 + பின்னூட்டம் வாங்கும் பதிவுகளைத் திரட்டி வைக்கலாம். அல்லது ஹாட் டாபிக் எதுவோ அதைப் பற்றி இடும் பதிவுகளில் 50+ பின்னூட்டம் பெறும் பதிவுகளை திரட்டலாம்.


இப்படிக்கு


நான் அவன் இல்லை.