Sunday, September 30, 2007

என்ன சந்தேகம் இவர்களுக்கு?

இராமர் என்பது ஒர் கற்பனை கதாபாத்திரம். இமயம் இருப்பதும், கங்கை இருப்பதும் எப்படி உண்மையோ அப்படியே ராமர் என்பது ஒரு கற்பனைப் பாத்திரம் என்பதும் உண்மை.
இராமாயாணம் என்பது திராவிடர்களின் மீது ஆரியர்களது படையெடுப்பை ஒட்டி புனையப்பட்ட ஒரு புனை கதை.இதை பண்டித ஜவஹர்லால் நேருவே குறிப்பிட்டிருக்கிறார்

இப்படி ஒர் பக்கம் " இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை" என்று கூப்பாடு
மறுபக்கம்
" ராமன் கடவுளின் அவதாரமில்லை.. குடிகாரன்,மாமிசம் சாப்பிட்டான் என்று வால்மீகி ராமாயணத்திலேயே சொல்லியிருக்கிறது " என்று தூற்றுவது.

" (உங்களைப் பொருத்த வரை இல்லாதவன்) எப்படி புலாலும் மதுவும் சாப்பிட முடியும் "

உங்களது நிலைபாடு"ராமன் என்பவன் இல்லவே இல்லை..பொய்"என்பதா அல்லது " அப்படி இருந்து புலால் சாப்பிட்டு மது அருந்தினான் " என்பதா ?
இப்படி அவசரக் குடுக்கை, முந்திரிக் கொட்டை மாதிரி யோசிக்காமல் ஏதாவது சொல்லிவிட்டு அதற்கு சப்பைக் கட்டு கட்டுவதால்தான் விஷயம் பூதகரமாகி விடுவது புரிகிறதா? இல்லை வழக்கம் போல் வேண்டுமென்றேதான் இதை செய்து கொண்டிருக்கிறீர்களா?

முதலில் உங்களுக்கு "தெளிந்த" பின் (முடிந்தால்) சரியாக யோசித்து கேள்வி கேளுங்கள்.

1 comments:

Anonymous said...

test