Sunday, September 30, 2007

ஓட்டுக்காக. இப்படிக்கூடவா..சீ..சீ

போன வருடம் ஜூன் மாதம் டாவின்சி கோட் என்கிற ஆங்கிலப் படம் ( தமிழில் "ஒரு குற்றப் பத்திரிக்கை" என்ற பெயரில் மொழிமாற்றம் பெற்றது) வெளிவந்த போது அதை அவசர அவசரமாக தடை செய்தது இந்த அரசு- சொன்ன காரணம் - சிறுபான்மை மக்களின் உணர்வுகளை அது புண்படுத்தக் கூடும்...அதனால் ஆர்ப்பாட்டங்கள் நடந்து அதன் மூலம் தமிழ் நாட்டில் அமைதிக்கு பங்கம் ஏற்படக் கூடும்" என்பதுதான்.

டாவிசி கோட் படத்தில் என்ன இருந்தது ..ஜீசசுக்கு மேரி மக்டலீன் என்பவருடன் திருமணம் நடந்திருந்தது..அது சரித்திரத்தில் ஒரு மறைக்கப் பட்ட உண்மை" என்பதாக கதை நகரும். இது தவிர்த்திருக்க வேண்டிய படமா...அல்லது கருத்து சுதந்திரத்தை பிரதிபலிக்கிறதா? என்பதான விசாரணைகளுக்குள் நான் இப்போது போகவில்லை.அது ஒரு புறம் இருக்கட்டும்.


ஆத்திகவாதி என்ற போர்வையில், ஒரு மதத்தில் கடவுளாக மதிக்கப் படுபவர் பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசி, விமர்சித்து , அதன் மூலம் அந்த மதம் சார்ந்தவர்களது மனம் புண்படுவதையும், இந்த வெட்டி விதண்டாவாதம் நாட்டில் ஏற்படுத்தும் அதிர்வலைகளையும் பற்றி கவலைப் படாமல் இருப்பவர்களை நான் கேட்பது, படங்களை ஆய்வு செய்து தணிக்கை செய்யும் சென்சார் போர்டே "இது உண்மையல்ல... ஒரு கற்பனைக் கதைதான்" என்ற தலைப்புடன் வெளியிடலாம் என அனுமதி கொடுத்த ஒரு படத்தினை, நாட்டின் பிற பகுதிகளில் திரையிடப்பட்ட ஒரு படத்தினை , முழுவதும் தடை செய்தது- அதுவும் மனது புண்படக் கூடும் அமைதிப் பங்கம் ஏற்படக் கூடும் என்ற ஊகங்களின் அடிப்படையில் தடை செய்தது-- "மைனாரிடி" ஓட்டுப் பொறுக்கும் அரசியல் தந்திரல்லாது வேறென்ன ?


இத்தனைக்கும் இந்தப் படத்தினை தடை செய்த பிறகுதான் கள்ளச் சந்தையில் அதன் டி வி டி க்கள் அமோகமாக விற்பனையானது என்பது தனிக்கதை.


" இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" பாட்டுதான் ஞாபகம் வருகிறது.

ஓட்டுக்காக. இப்படிக்கூடவா..சீ..சீ...

3 comments:

')) said...

இது குறித்த பவர் பாயிண்ட் பிரசண்டேஷன் ஒன்றை (திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் உருவாக்கியது) இங்கே காணலாம்.

நன்றி,

எஸ்..கே

http://kichu.cyberbrahma.com/

')) said...

வருகைக்கு நன்றி எஸ் கே.

ஆனால் நான் முன்னே குறிப்பிட்டது போல் இந்தப் பதிவு டாவின்சி கோட் சரியா? தவறா ? வேண்டுமா ?வேண்டாமா? பற்றியல்ல.

அதை வைத்து பண்ணும் ஓட்டு பொறுக்கி அரசியல் பற்றி

Anonymous said...

கஇந்திய அரசியல் ஒரு சாக்கடை, அதில் தமிழக அரசியல் 30-40 வருடங்களாக அடைபட்ட சாக்கடை.....அந்த அடைபட்ட சாக்கடையில் அடைப்பென்பது தி.மு.க...இது பற்றி பேசி நீங்க் நாறிடாதீங்க.....