Sunday, September 30, 2007

ராமர்....பந்த்....உண்ணாவிரதம்...அப்புறம்

முன்னெல்லாம் ஆட்சியில் உள்ளவர்களின் தவறான அல்லது எதிரான கொள்கைகளை சுட்டிக் காட்டி எதிர் / மாற்று கட்சியினர் போன்றோர் "பந்த்" போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவர்.இப்போது "பகுத்தறிவு கண்ட பரிணாம வளர்ச்சியால்" ஆட்சியில் உட்கார்ந்து கொண்டே "பந்த்" நடத்துவது. இது எந்த மாதிரி கையாலாகாததனம் என்று இன்னும் மக்களுக்கு புரியவில்லை

இப்படித்தான் போனதடவை உச்ச நீதி மன்றம் விதித்த இடக்கால தடையை எதிர்த்து (இட ஒதுக்கீட்டுக்கு எதிராக) 31.03.07 அன்று பந்த் நடத்தி ஓய்ந்தார்கள். அதற்கப்புறம் அதை முன்னெடுத்துச் செல்ல என்ன கிள்ளிப் போட்டார்கள் என்று கேட்டால் ??? ஒன்றும் இல்லை.

இப்போது 6 மாதம் கழிந்து மறுபடியும்..தேவையற்ற ஒரு ஸ்டண்ட்.சேது சமுத்திர கால்வாய் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஒரு பந்த் அறிவிப்பு...யாருக்கு எதிராக அல்லது இதன் மூலம் என்ன சாதிக்க நினைத்தார்கள் என்பது வழக்கம் போல் பகவான் ராமருக்கே வெளிச்சம்.

ஆட்சியில் இருப்போரே பந்த் என்ற பெயரில் நடத்தும் கேலிக்கூத்துக்களை சுட்டிக்காட்டும் விதமாக "இனி எந்த மாநிலத்திலும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பந்த் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது " போல் தெரிகிறது.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக "உச்ச நீதி மன்றத்தின் " தடையை எதிர்த்து நாளை உண்ணாவிரதப் போராட்டமாம்..அப்ப சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் ? அது அப்புறம் பார்க்கலாம்...one at a time ?????!!!!!

அது சரி..இந்த உண்ணாவிரதம் ஒரு நாளைக்கா? தொடர் உண்ணாவிரதமா?

2 comments:

')) said...

உண்ணாவிரதித்திலாவது உண்மையா சாப்பிடாம இருங்கப்பா...டயட்டில் இருந்தால் உடம்புக்கு நல்லது.

')) said...

காலைல சொன்னதை இப்ப மாத்திட்டாங்க போல தெரியுது...உண்ணாவிரதமும் சேது கால்வாயை சீக்கிரம் வெட்டக் கோரித்தானாம் ..நீதி மன்ற தீர்ப்பை கண்டித்து அல்ல. அந்தம்மா கன் டெம்ட் ஆப் கோர்ட் அப்படி இப்படீனெல்லாம் பூச்சாண்டி காட்டுறாங்களே..பயந்துட்டாங்களோ:)