Sunday, September 30, 2007

இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா ?

"எத்தனை தடைகள் வந்தாலும் தி மு க-வின் நலத்திட்டங்களை செயல் படுத்தியே தீருவோம்."- முதலமைச்சர் கருணாநிதி ( சன் நியூஸில் வந்தது)


இதையேதான் அந்த அம்மாவும் இன்னைக்கு ஜெயா டி வியில் சொல்லியிருக்காங்க - (பெட்டி வாங்கிகிட்டு) நீங்க பண்றதெல்லாம் உங்கள் (திமுக) நலத்திட்டமாம்..மக்கள் நலத் திட்டமில்லையாம்.

நீங்களும் இதே அர்த்தத்தில்தான் சொன்னீங்களா ? ?????

பின் குறிப்பு: இன்னைக்கு சுப்ரீம் கோர்ட் தயவால அந்த அம்மா பக்கம் பக்கமா போட்டு உங்களை வாங்கியிருக்காங்க..நீங்களும் பதில் அறிக்கை,கேள்வி பதில், உடன் பிறப்புக்கு கடிதம், சிலேடை நையாண்டி அல்லாம் போட வேண்டியிருக்கும்..சேது சமுத்திரம், முல்லை பெரியார், காவேரி, கிருஷ்ணா , மக்கள் நலம் எல்லாம் இப்ப முக்கியமே இல்லை..அந்தம்மாவுக்கு பதில் அறிக்கை,சவால் எல்லாம் தயார் பண்ணுங்க மொதல்ல.

என்னமோ போங்க...எல்லோரும் நல்லா இருந்தா சரி.

2 comments:

Anonymous said...

நாந்தான் பச்சைதமிழன் அப்படின்னு சொல்லிக்கிட்டு நாலு கழிசடைகள் வந்து கழியும்....கவனிச்சு மட்டறுத்துடுங்க...

')) said...

கடைசில நாளைக்கு ஆபிஸ் உண்டா இல்லையானு தெரியாமப் பண்ணிட்டாங்கப்பா